Suriya : அந்த படத்திற்காக என்னையே மாற்றினேன்.. சூர்யா பகிர்ந்த விஷயம்!
Suriya About Nandha Movie Transformation : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இவருக்கு சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் பாலா. இந்நிலையில் பாலாவுடன் இணைந்த, நந்தா படத்திற்காக தன்னை மாற்றியது குறித்து சூர்யா கூறிய விஷயம் பற்றி பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு 1 படங்கள் வீதம், திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இவர் கடந்த 1997ம் ஆண்டு வெளியான “நேருக்கு நேர்” (Nerrukku Ner) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இந்த படத்தை 90களில் பிரபல இயக்குநராக இருந்த வசந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன், தளபதி விஜய்யும் (Thalapathy Vijay) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலு கதாநாயகனாக தனது நடிப்பை சூர்யா தொடர்ந்திருந்தார். மேலும் இவர் இயக்குநர் பாலா (Bala) இயக்கத்தில் நடித்திருந்த முதல் திரைப்படம் நந்தா.
கடந்த 2001ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்தான் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இணைந்து பணியாற்றிய முதல் படமாகும். இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, நந்தா படத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷயம் பற்றி பகிர்ந்திருந்தார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : அந்த காட்சியை பார்த்ததும் புல்லரித்துவிட்டது.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நந்தா படத்திற்காக தன்னை மாற்றிக்கொண்ட பல விஷயங்கள் பற்றி பேசிய சூர்யா :
அந்த நேர்காணலில் நந்தா படம் பற்றி பல்வேறு விஷயங்ககளை சூர்யா பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “நந்தா படத்திற்காக நான் சூர்யாவாக இருக்க விரும்பவில்லை. நான் நந்தா கதாபாத்திரத்திற்கு என்னை முழுவதுமாக மாற்றவேண்டும் என நினைத்தேன். அதற்காக பாலா சார் எனக்கு பெரும் உதவியை செய்திருந்தார். அந்த படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினேன். அப்போது நான் உணர்ந்த விஷயம், திரைப்படம் என்றால் வேறு உடை அணிந்துவிட்டால் அது ஒரு கதாபாத்திரம் கிடையாது. அந்த ரீல் கதாபாத்திரத்தை போல, நிஜமாகவே மாறவேண்டும்.
இதையும் படிங்க : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!
மேலும் படத்தில் கண்ணில் ஒரு அசைவு இருந்தாலும், அது ஒரு விஷயத்தை குறிக்கும். படங்களில் ஒரு சிறு சிறு விஷயங்கள் பலவற்றை மக்களுக்கு கடத்தும். மேலும் நடிப்பில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது, அதையெல்லாம் நந்தா படத்தின் மூலம் , பாலா சாரிடம் நான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு நான் படங்களில் பல விசயங்களை தெரிந்துகொண்டேன்” என்று அந்த நேர்காணலில் நடிகர் சூர்யா வெளிப்படையாக பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.