உலகம் முழுவதும் ரூபாய் 202 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா – மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படக்குழு
Lokah: Chapter 1 – Chandra: மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா படம். இந்தப் படம் தற்போது 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி உலகம் முழுவது உள்ள ரசிகர்களை திரும்பிக் பார்க்க வைப்பது மலையாள சினிமா தான். முன்னதாக சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து மின்னல் முரளி என்ற படத்தை நடிகரும் இயக்குநருமான பேசில் ஜோசஃப் (Basil Josheph) இயக்க நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியானது. இந்தப் படம் மலையாள சினிமாவை உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சென்றது என்றே கூறலாம். மேலும் உலம அளவில் பல நாடுகளில் இந்தப் படத்திற்காக விருதுகள் வழங்கப்பட்டது என்றும் கூறலாம். மலை காலத்தில் மின்னல் வெட்டியபோது அதில் பாதிக்கப்பட்ட இருவருக்கு அதீத சக்தி கிடைக்கிறது. அதனை ஒருத்தர் நல்ல விசயத்திற்காகவும் மற்றொருவர் தீய விசயத்திற்காகவும் பயன்படுத்திகின்றனர். இறுதியில் என்ன நடந்தது என்பதே மின்னல் முரளி படத்தி கதை. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கொரோனா காலம் என்பதால் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இந்தப் படமும் வசூலில் கலக்கியிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹீரோ படமாக தற்போது வெளியாகியுள்ளது லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




லோகா மீதான உங்கள் காதல் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது:
இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் தற்போது வரை உலக அளவில் ரூபாய் 202 கோடிகள் வசூலித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் லோகா படத்தின் மீதான உங்களின் காதல் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று தெரிவித்த அவர்கள் பணிவன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்து இருந்தனர்.
Also Read… ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
லோகா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Your love makes us happy, grateful and humble. Thank you! ☺️#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @jakes_bejoy @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/N6gTC3p5UD
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 10, 2025
Also Read… தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்திற்காக இத செய்தேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்