Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் சூர்யா எனக்கு கொடுத்த அட்வைஸ் – வைரலாகும் சாண்டி பேச்சு!

Sandy Master: தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் சாண்டி. இவர் தொடர்ந்து படங்களில் நடன இயக்குநராக பிசியாக இருக்கிறார். நடன இயக்குநராக பிசியாக இருந்தாலும் தற்போது தொடர்ந்து படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சாண்டி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா எனக்கு கொடுத்த அட்வைஸ் – வைரலாகும் சாண்டி பேச்சு!
சூர்யா உடன் சாண்டி மற்றும் அவரது மனைவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2025 21:10 PM IST

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்துள்ளார். படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அப்படி பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாவது உறுதியானால் நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்துடன் சூர்யாவின் கருப்பு படம் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், நட்டி சுப்ரமணியம், இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் நடன இயக்குநர் சாண்டி இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

குடும்பத்தோட நிறைய நேரம் செலவிடுங்க:

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சாண்டி கருப்பு படத்தின் ஷூட்டிஙில் நடிகர் சூர்யா தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் குடும்பத்தோட அதிக நேரம் செலவிடுங்க. குழந்தைகள் கூட நிறைய நேரம் செலவிடுங்க. 10 வயசுக்கு மேல ஆச்சுனா அவங்க தனி உலகத்துல இருப்பாங்க. அவங்களுக்குனு ஃப்ரண்ட்ஸ் கேங் அப்படி மாறிடுவாங்க. நம்மலால அவங்க கூட நேரத்த கழிக்க முடியாது. அதனால இப்போவே நீங்க குழந்தைகள் கூட எவ்வளவு நேரம் செலவிட முடியுமோ செலவிடுங்க என்று சூர்யா சாண்டிக்கு அட்வைஸ் செய்ததாக அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

Also Read… இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததா இயக்க உள்ளது இந்த மலையாள நடிகரைத்தான் – அவரே சொன்ன விசயம்!

இணையத்தில் கவனம் பெறும் சாண்டியின் வீடியோ:

Also Read… என் அழகான மனிதர் நடிகர் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – இயக்குநர் சுதா கொங்கரா