Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kumki 2: அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகும் ‘கும்கி 2’.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Kumki 2 First Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அர்ஜுன்தாஸ். இவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகிவரும் நிலையில் இவர் நடிக்கவுள்ள படம்தான் கும்கி 2. இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kumki 2: அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகும் ‘கும்கி 2’.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கும்கி 2 திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2025 15:12 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் (Prabhu Solomon) இயக்கத்தில் வெளியான திரைப்படம் கும்கி (Kumki). இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) நடிக்க, அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படமாக இது அமைத்திருந்தது. இந்த படமானது யானை பாகனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மாறுபட்ட திரைக்கதையில் வெளியானது. இதில் மாணிக்கம் என்ற யானையின் பாசப்போராட்டமும் முக்கியத்துவம பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்த படமானது சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்த நிலையில், இந்த படத்தின் அடுத்தப் பாகமாக கும்கி 2 (kumki2) உருவாகவுள்ளது.

சுமார் 13 வருடங்களுக்கு பின், கும்கி பார்ட் 2 படமானது உருவாகவுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அர்ஜுன்தாஸ் நடிக்க, ஹீரோவாக மதி என்பவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரிதா ராவ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : அர்ஜுன்தாஸின் நடிப்பில் வெளியான பாம்ப் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

கும்கி 2 படக்குழு வெளியிட்ட முதல் பார்வை பதிவு :

கும்கி 2 திரைப்படத்தின் கதைக்களம்

இந்த கும்கி 2 படமும், முதல் பாகத்தை போல யானையை மையமாக வைத்து உருவாகவுள்ளதாம். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் யானை பாகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. கும்கி படமானது முற்றிலும் எமோஷனல் மற்றும் காதல் என வித்தியாசமான ஸ்டோரியில் வெளியானது. இந்த முதல் பாகத்தில் வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது பாகமானது உருவாகவுள்ளது. இந்த கும்கி 2 படமானது கொஞ்சம் வித்தியாசமான கதையில் உருவாகாவுள்ளதாம்.

இதையும் படிங்க : சிம்புவை அப்படி சொல்லாதீங்க.. இதுதான் உண்மை – ஓபனாக பேசிய அஸ்வத் மாரிமுத்து!

இந்த படத்தின் முதல் பார்வையில், குழந்தைகள் 3 பேர் ஒரு குட்டி யானையிடம் நிற்பதுபோல இருக்கிறது. இந்நிலையில், இந்த படமானது நட்பு மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தில் உருவாக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜுன்தாஸின் புதிய படங்கள்

நடிகர் அர்ஜுன்தாஸின் நடிப்பில் சமீபத்தில் பாம் என்ற படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு பாசிடிவ் விமர்சங்களை கொடுத்து வருகிறது. இந்த படத்தை அடுத்ததாக கும்கி 2 படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில், பவன் கல்யாணின் நடிப்பில் தயாராகியிருக்கும், They Call Him OG என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.