நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்
Actor Jai: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜெய். இவர் பெரும்பாலும் ரோம் காம் படங்களிலேயே நாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனர் நடிகர் ஜெய் (Actor Jai). இவர் இந்தப் படத்தில் நடிகர் விஜயின் தம்பியாக நடித்து இருப்பார். ஜெய் காதலிக்கும் பெண்ணின் தந்தையால் அவர் கொலைசெய்யப்படவார். அதனைத் தொடர்ந்து விஜய் அவர்களை பழிவாங்குவார். இதுவே பகவதி படத்தின் கதை ஆகும். இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தில் நடித்தார். இதில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா என பலர் நடித்து இருந்தனர். இளைஞர்கள் கூட்டம் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம், வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, வலியவன், புகழ், சென்னை 600028 II, கலகலப்பு 2, கேப்மாரி, குற்றம் குற்றமே, காபி வித் காதல், அன்னபூரணி என பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் ஜெய்.
ஜெய் நடிக்காமல் மிஸ் செய்த 3 முக்கியப் படங்கள்:
இந்த நிலையில் முன்னதாக செய் பேட்டி ஒன்றில் பேசியபோது அவர் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே சிவா மனசுல சக்தி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்தப் படத்திற்கு தாடி எடுக்க வேண்டும் என்று சிவா மனசுல சக்தி படத்தின் இயக்குநர் ராஜேஷ் கேட்டதால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுப்ரமணியபுரம் படத்தில் இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாகவும் தொடர்ந்து ராட்சசன் படத்தின் வாய்ப்பு வந்தபோது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் அந்தப் படத்தின் வாய்ப்பை தவறவிட்டதாகவும் நடிகர் ஜெய் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக அறிமுகம் ஆன சாண்டி – வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்
நடிகர் ஜெய் சமீபத்தில் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் – அருண் விஜய்