AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் கல்லாகட்டும் சூர்யா 46? வைரலாகும் தகவல்

Suriya 46 Movie : நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு மற்றும் சூர்யா 46 என இரண்டு படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் கல்லாகட்டும் சூர்யா 46? வைரலாகும் தகவல்
சூர்யா 46 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2025 12:58 PM IST

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது கருப்பு மற்றும் சூர்யா 46 என இரண்டு படங்களில் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் கருப்பு படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் தமிழில் முன்னதாக நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு மொழியில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையானதா?

லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை தொடங்கி தொடர்ந்து படம் குறித்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ரூபாய் 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!

சூர்யா 46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்

Follow Us