Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலையாள சினிமாவில் புது அவதாரம் எடுத்த பேசில் ஜோசஃப் – வாழ்த்தும் ரசிகர்கள்

Basil Joseph : மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக பலப் படங்களில் கலக்கி வருபவர் பேசில் ஜோசஃப். இவர் தற்போது மலையாள சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி அவர் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் புது அவதாரம் எடுத்த பேசில் ஜோசஃப் – வாழ்த்தும் ரசிகர்கள்
பேசில் ஜோசஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2025 14:32 PM IST

மலையாள சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் வினித் ஸ்ரீநிவாசன். இவரது உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பேசில் ஜோசஃப் (Basil Joseph ). வினித் ஸ்ரீநிவாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் போதே அவரது இயக்கத்தில் வரும் படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் பேசில் ஜோசஃப். அதனைத் தொடர்ந்து பேசில் ஜோசஃப் மலையால சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பேசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மின்னல் முரளி. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பேசில் ஜோசஃப் மலையாள சினிமாவில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்ற படத்தில் நடித்தன் மூலம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பேசில் ஜோசஃப் நடிக்கும் படங்களுக்கு மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளரான பேசில் ஜோசஃப்:

இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் 4 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் இறுதியாக நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்த ஹிருதயபூர்வம் படத்தில் கேமியோ ரோலில் அவர் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதாக பேசில் ஜோசஃப் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் தற்போது பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இவரது தயாரிப்பில் முதலில் நடிக்க உள்ளது யார் என்றும் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்

பேசில் ஜோசஃப் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ