Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது தலைவன் தலைவி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Thalaivan Thalaivi Movie: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது தலைவன் தலைவி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
தலைவன் தலைவி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Sep 2025 18:13 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்து திரையரங்குகளில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அப்பாவாக சரவணன், அம்மாவாக தீபா, தங்கையாக ரோஷ்ணி ஹரிபிரியன் ஆகியோர் நடித்து இருந்த நிலையில் நடிகை நித்யா மேனனின் அப்பாவாக பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஷ், அண்ணனாக ஆர்.கே.சுரேஷ் நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், யோகி பாபு, மைனா நந்தினி, அருள் தாஸ், வேட்டை முத்துகுமார், செண்ட்ராயன், கல்கி ராஜா, சித்ரா லக்‌ஷ்மணன், கே.பி.ஜெகன், பாபா பாஸ்கர், லொள்ளு சபா மாறன், வினோதினி வைத்யநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

ஃபேமிலி செண்டிமெண்ட் ஆக்‌ஷனை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்தார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் வசூலில் 100 கோடி ரூபாய் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபேமிலி ப்ளாக்ஸ் பஸ்டர் படமாக மாறிய தலைவன் தலைவி:

திருமணம் ஆன தம்பதிகளின் இடையே குடும்பத்தில் உள்ளவர்களால் ஏற்படும் பிரச்னைகளும் அதற்கு அவர்களின் தீர்வு என்ன என்பதைப் பற்றியும் மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் இந்தப் படத்தில் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குநர் பாண்டிராஜ். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால் விவாகரத்து எல்லாம் ஒரு விசயமே இல்லை என்பதே இந்தப் படத்தின் கருத்து. இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read… பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே விட்டுட்டு போயிடலாம் நினச்சேன் – மாரி செல்வராஜ் சொன்ன விசயம்

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!