பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே விட்டுட்டு போயிடலாம் நினச்சேன் – மாரி செல்வராஜ் சொன்ன விசயம்
Director Mari Selvaraj : தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த கருத்துகளையும் தனது வாழ்க்கையில் நடந்த பாதிப்புகளையும் திரைப்படங்களின் மூலம் காட்டி தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj) இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படங்களை இயக்குவதற்கு முன்பு இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதிய வன்கொடுமை எப்படி எல்லாம் இருக்கும் என்று மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக இந்தப் படத்தில் இயக்குநர் மரி செல்வராஜ் காட்டியிருப்பார். இந்தப் படத்தில் நடிகர் கதிர் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், ஹரி கிருஷ்ணன், சண்முகராஜன், ஜி.மாரிமுத்து, பூ ராமு, கராத்தே வெங்கடேசன், லிசி ஆண்டனி, சுகந்தி நாச்சியாள், ரகு, கர்ணன் ஜானகி, வண்ணார்பேட்டை தங்கராஜ், சூப்பர் குட் சுப்ரமணி, அந்தோணி தாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பரியேறும் பெருமாள் படத்தை முடிக்க இயக்குநர் ராம் தான் காரணம்:
இயக்குநர் மாரி செல்வராஜ் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய 4 நாட்களிலேயே இந்த சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன். என் கூட என் டீம்ல இருக்கவங்களே என்ன இவருக்கு படமே எடுக்க தெரியல அங்க நிக்க சொல்றது ஓட சொல்றதுனு பண்ணிட்டு இருக்கார்னு காதுபட பேசுனாங்க. அது எனக்கு மிகுந்த மன உழைச்சளைக் கொடுத்தது.
அதுக்கப்பறம் ராம் சார்க்கு போன் பண்ணி நான் போயிடலாம்னு இருக்கேன்னு சொன்னேன். அப்போ அவர்தான் நீ எத எடுக்குற உன் வாழ்க்கையில நடந்த விசயத்தான எடுக்குற என்று கேட்டார். நானும் ஆமான்னு சொன்னேன். அப்போ மத்தவங்க பேசுறத நீ காதுல வாங்காத படத்த எடுனு சொன்னார். அப்பறம் நான் எதபத்தியும் கவல படாம எடுத்தேன் என்று மாரி செல்வராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… எம் மகன் படத்தில் அந்த சீன்ல நாசர் சார் நிஜமாவே அடிச்சாரு – நடிகர் பரத்
இயக்குநர் மாரி செல்வராஜின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Let my blazing ocean’s thirst be quenched by the single teardrop that steals away from your eyes! 🌹#TheekkoluthiOutNow 🌊💧🔥
▶️ https://t.co/fNAYqKUxWo
#BisonKaalamaadan 🦬 💥 #Theekkoluthi 🔥#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆@applausesocial… pic.twitter.com/oiT3glZJ8C— Mari Selvaraj (@mari_selvaraj) September 1, 2025