Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு இதோ!

Bigg Boss Season 9 Tamil : இந்தியாவில் முதன்முதலில் இந்தி மொழியில்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. அடுத்ததாக தமிழ் போன்ற பல்வேறு மொழிகளில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு இதோ!
பிக் பாஸ் 9 சீசன் தமிழ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Sep 2025 17:26 PM IST

தமிழில் மக்களிடையே மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் (Reality shows) ஒன்றாக இருந்து வருவது பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆங்கிலத்தில் வெளியாகிவந்த “பிக் பிரதர்ஸ்” (Bigg Brothers) என்ற நிகழ்ச்சியின், மறு உருவாக்கமாக இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 19 வருடங்களுக்கும் முன் இந்தி மொழியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழில் இதுவரை சுமார் 8 சீசன் நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 9ன் (Bigg Boss Season 9 Tamil) அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

கடந்த பிக்பாஸ் 8வது சீசனை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கிய நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியையும் அவர்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் குழு இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்.. அட இவரா?

அதன்படி, இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி வரும் 2025 அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஆரம்பமாகி உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிக்பாஸ் சீசன் 9 ஆரம்ப தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் :

தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் 7வது சீசன் வரை, நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பின் அவர் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவழங்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க :  டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்

இந்நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி ரூ 60 கோடியை சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுப்பதற்கு மொத்தம் சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கியிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்

இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில், தமிழ் பிரபலங்களான ஷபானா, புவி அரசு, லக்ஷ்மி ப்ரியா, பாலா சரவணன், டான்ஸ் மாஸ்டர் சதீஸ் கிருஷ்ணன் மற்றும் ஃபரீனா ஆசாத் என பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.