இன்று வெளியாகிறது இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் – புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Idli Kadai Movie: தனுஷ் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் இட்லி கடை. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தனுஷ் இயக்கும் நான்காவது படம் ஆகும். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர். இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இசை வெளியீட்டு விழாவிலே ட்ரெய்லர் வெளியீட்டு விழா இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் ட்ரெய்லர் விழா நடைபெறவில்லை அதற்கு பதிலாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை தனியாக வைத்துள்ளது படக்குழு.




கோவையில் வெளியாகும் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர்:
அதன்படி இன்று செப்டம்பர் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு கோவையில் உள்ள ப்ரோசோன் மாலில் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாக உள்ள ட்ரெய்லரை முன்னிட்டு படக்குழு தற்போது சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From our lands below to the skyscrapers above, the sound of #IdliKadai echoes
Grand trailer launch event at Prozone Mall, Coimbatore today evening
Grand release worldwide on October 1st 🔥@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran… pic.twitter.com/Z0yGnq7B5l
— Wunderbar Films (@wunderbarfilms) September 20, 2025
Also Read… கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் தான் நடிப்பேன் – நடிகர் கவின்