STR49 Movie: இரண்டு பாகமாக உருவாகிறதா சிலம்பரசனின் STR49? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் இதோ!
STR49 Movie Update: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தற்போது சிலம்பரசன் நடித்துவரும் STR49 படமானது உருவாகிவருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், சிலம்பரசனின் STR49 படமானது 2 பாகங்களாக உருவாகவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
                                கோலிவுட் சினிமாவில் ஹிட் இயக்குநர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் முன்னணி இயக்கத்தில் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல்வேறு உச்ச பிரபலங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அந்த வகையில்இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai part 2). இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்தாக சூர்யாவுடன் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தில் இணைவதாக கூறப்படட நிலையில், சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிபோகியுள்ளது. மேலும் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் சிலம்பரசனை (Silambarasan) வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார்.
இந்த திரைப்படமானது STR49 என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், STR49 படம் பற்றி அப்டேட் கொடுத்திருக்கிறார்.




இதையும் படிங்க : உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே… வெளியானது குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர்
STR49 படத்தை பற்றி வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்
அந்த நேர்காணலில் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார், தொடர்ந்து பேசிய வெற்றிமாறன் STR49 படம் பற்றிய அப்டேட் கொடுத்திருக்கிறார். அதில் அவர், “STR49 படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே கிட்டத்தட்ட 1 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களுக்கு படம் தயாராகிவிட்டதாகவும், இது 5 எபிசோடுகளில் ஒன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார். மேலும் சிலம்பரசனின் STR49 படமானது 2 பாகங்களாக உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்
இந்த தகவலானது தற்போது சிலம்பரசனின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை STR49 படமானது இரு பாகங்களாக உருவானால் சிலம்பரசனுக்கு அடுத்தடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலம்பரசனின் STR49 பட அறிவிப்பு பதிவு
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️https://t.co/6QoXAEq9PL@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47 pic.twitter.com/ys4zbVBwux
— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் STR49 :
நடிகர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகும் இந்த STR49 படத்தை, வீ க்ரியேஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனுடன் நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றன.
மேலும் இந்த STR49 படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ, வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.