Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Deepika Padukone : பிரபாஸின் ‘கல்கி 2898ஏடி’படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம் – காரணம் என்ன?

Kalki 2898 AD Crew: பான் இந்திய மொழி திரைப்படமாக கடந்த 2024ம் ஆண்டு வெளியான படம் கல்கி 2898ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் பாகம் 2ம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது.

Deepika Padukone : பிரபாஸின் ‘கல்கி 2898ஏடி’படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம் –  காரணம் என்ன?
நடிகை தீபிகா படுகோன் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Sep 2025 17:11 PM IST

தென்னிந்திய சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் கல்கி 2898ஏடி (Kalki 2898 AD). இந்த படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் (Nag Ashwin) இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் (Prabhas) கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகைகள் தீபிகா படுகோன் (Deepika Padukone), திஷா பதானி போன்ற நடிகைகளும் இணைந்த நடித்திருந்தனர். இதில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மிக முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

இதில் நடிகை தீபிகா படுகோன், சுமதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதில் இவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் பாகம் 2 விரைவில் உருவாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விளக்கியுள்ளாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இரண்டு பாகமாக உருவாகிறதா சிலம்பரசனின் STR49? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் இதோ!

கல்கி 2898ஏடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு

அந்த பதிவில், இனிமேல் வரவிற்கும் கல்கி 2898ஏடி பட தொடர்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் நடிக்கமாட்டார் என்றும், கவனமாக முடிவெறுத்திருக்கும் நிலையில், அவரை இந்த படத்தில் இருந்து நீக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். முதல் பாகத்தை உருவாக்கும்போதே எங்களால் ஒரு கூட்டணியை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் கல்கி 2898ஏடி ஒரு அர்பணிப்பிற்கு தகுதியான திரைப்படம்தான்.

இதையும் படிங்க : குட் பேட் அக்லி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் – படக்குழு தொடர்ந்த வழக்கு

மேலும் நடிகை தீபிகா படுகோனின் எதிர்கால படங்களுக்கு வாழ்த்துக்கள் என அந்த அறிவிப்பில் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கி 2898ஏடி பார்ட் 2 படத்தில் நடிகை தீபிகா படுகோன்தான் லீட் கதாநாயகியாக இருக்கும் நிலையில், ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கல்கி 2898ஏடி பார்ட் 2 படம் :

நடிகர் பிரபாஸ் முன்னணி வேடத்தில் நடித்திருந்த கல்கி 2898ஏடி, கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதை தொடர்ந்து, இந்த படத்தின் பார்ட் 2 படம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.