Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்த பிறகும் விறுவிறுப்பாக அடுதடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Rajinikanth :  கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Sep 2025 12:17 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது இளைய தலைமுறையினர் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையிலும் தனது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இளைய தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 15-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதன்படி இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் எழுதி இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது.

கதை கதாப்பாத்திரம் முடிவானதும் கமல் உடன் இணைந்து நடிப்பேன்:

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் நானும் கமலும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இறுக்கிறது. அதன்படி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளது.

படத்தின் கதை கதாப்பாத்திரம் மற்றும் இயக்குநர் முடிவானதும் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்று ரஜினிகாந்த் சொன்னது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. அப்போ லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read… மகன் லிங்கா உடன் டான்ஸ் ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ:

Also Read… ரேவதினு கூப்பிடா திரும்பி கூட பாக்க மாட்டேன்… எனக்கு அந்த பேரே பிடிக்காது – நடிகை ஓபன் டாக்