கமல் சார் கூட நடிக்கும் போது அந்த சீன்ல பயந்து அழுதுட்டேன் – நடிகை மீனா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
Actress Meena: நடிகை மீனா இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர் கமல் ஹாசன் உடன் அவ்வை சண்முகி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

சினிமாவில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டுவரை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பலப் படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா (Actress Meena). இதனைத் தொடர்ந்து கடண்டஹ் 1986-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்துள்ளார். கண்ணழகி மீனா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் அப்போது ரசிகர்களின் கனவுக் கண்ணியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பு ரசிகர்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு நடிகை மீனாவின் நடனமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
தொடந்து படங்களில் நாயகியாக நடித்துவந்த நடிகை மீனா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் அதிகமாக நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன் பிறகு படங்களில் நாயகியாக மட்டும் இன்றி தொடர்ந்து அக்கா கதாப்பாத்திரம் அண்ணி கதாப்பாத்திரம் என நடித்து வருகிறா. மலையாள சினிமாவில் அம்மா கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அவ்வை சண்முகி படத்தில் கிஸ் சீன் நடிக்க சொன்னதும் அழுதுட்டேன்:
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்த அவ்வை சண்முகி படத்தில் நடித்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை மீனா பேசியிருந்தார். அதில் கமல் சார் படத்தில கிஸ் சீன் இருக்குன்றதே மறந்துட்டு படத்தில நடிக்க ஒத்துகிட்டேன். அப்பறம் அவ்வை சண்முகி படத்தில் இரண்டாவது நாள் ஷூட்டிங்கில் இன்னைக்கு என்ன சீன் என்று கேட்டபோது கிஸ் சீன் என்று சொன்னார்கள்.
Also Read… என் சிறு வயது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதுதான் இட்லி கடை படம் – தனுஷ் சொன்ன விசயம்
அப்போ தான் எனக்கு நியாபகமே வந்தது கமல் சார் படத்தில கிஸ் சீன் இருக்கும்ல என்று. அன்னைக்கு ஃபுல்லா அழுதுட்டே இருந்தேன். கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட பேச முடியாது. அவர் ரொம்ப ஸ்ரிட். என் அம்மாகிட்ட நீ பேசுனு நான் அழுக ஆரம்பிச்சுட்டேன் என்று நடிகை மீனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இன்று 16-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகை மீனா தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் கல்லாகட்டும் சூர்யா 46? வைரலாகும் தகவல்