Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Antony: பராசக்தி பட டைட்டில் விவகாரம்… அதை கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல – விஜய் ஆண்டனி விளக்கம்!

Vijay Antony About Shakthi Thirumagan Telugu Title Issue: விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் சக்தி திருமகன். இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் பராசக்தி என அறிவித்த நிலையில், அதன் டைட்டில் மீண்டும் மாற்றப்பட்ட காரணம் குறித்து விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார்.

Vijay Antony: பராசக்தி பட டைட்டில் விவகாரம்… அதை கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல – விஜய் ஆண்டனி விளக்கம்!
விஜய் ஆண்டனி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Sep 2025 16:42 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமிக்க நடிகராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த விதத்தில், இந்த 2025 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் இரண்டாவது படமாக வெளியாக காத்திருப்பது சக்தித் திருமகன் (Shakthi Thirumagan) திரைப்படம். இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமில்லாமல் இசையமைப்பு மற்றும் தயாரிப்பு என பல்வேறு பணிகளையும் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் பராசக்தி (Parasakthi) என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் டைட்டில் பிரச்னை பெரிதாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டைட்டில் பிரச்னை குறித்து விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : தயாரிப்பாளர்களாக லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் – துல்கர் சல்மான் சொன்ன விசயம்

சக்தித் திருமகன் தெலுங்கு டைட்டில் பிரச்னை பற்றி விஜய் ஆண்டனி பேச்சு

அந்த நேர்காணலில் நடிகர் விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் தொடர்ந்து பேசிய அவர் சக்தித் திருமகன் தெலுங்கு டைட்டில் குறித்து பேசியிருக்கிறார். அதில், “ஆரம்பத்தில் பராசக்தி என்ற டைட்டிலை ஏ.வி.எம் நிறுவனத்திடம் ட்ரை பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்தில் எனது படங்கள் தொடர்ந்து தோல்வியாகவே இருந்தது, எனக்கும் பெரிய வியாபாரமும் இல்லை. பராசக்தி டைட்டில் என்பது பெரிய டைட்டில், அது எவ்வாறு விஜய் ஆண்டனிக்கு குடுப்பாங்க என்ற நியாயம் இருக்கிறது.

இதையும் படிங்க : 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா – உற்சாகத்தில் ரசிகர்கள்

அதன் பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால் சக்தி திருமகன் படத்தினை முழுவதுமாக முடித்துவிட்டு, படத்தை காண்பித்து டைட்டிலை கேட்டு பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் அதற்குள் இன்னொரு படத்திற்கு அந்த டைட்டிலை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நியாயப்படி அணுகி எடுத்துக்கொண்டார்கள். தமிழில் இந்த டைட்டிலை வாங்க முடியாமல் இருந்த நிலையில், நான் ஏற்கனவே தெலுங்கில் பராசக்தி என டைட்டிலை வாங்கியிருந்தேன்.

விஜய் ஆண்டனி பேசிய வீடியோ பதிவு :

மேலும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு எனக்கு தெரிந்தவர்கள் என்பதால், அவர்கள் என்னிடம் கேட்டதால் தெலுங்கு டைட்டிலையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். எனது சக்தித் திருமகன் படத்தின் தெலுங்கு டைட்டிலை பத்ரகாளி என மாற்றிக்கொண்டேன்” என்று நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருந்தார்.