Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தியேட்டர்ல தனி ஃபீல்தான்.. ரீ ரிலிசாகும் குஷி படம்.. என்னவெல்லாம் ஸ்பெஷலா இருக்கும்?

Kushi Movie: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குஷி. இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்ல தனி ஃபீல்தான்.. ரீ ரிலிசாகும் குஷி படம்.. என்னவெல்லாம் ஸ்பெஷலா இருக்கும்?
குஷி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2025 17:16 PM IST

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் என்பது தற்போது மிகவும் சாதாரணமான விசயமாக மாறியது. மேலும் புதிதாக வெளியாகும் படங்களைவிட ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் முன்னதாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது வசூலில் சாதனைத் படத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் கில்லி படம் தான் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமையும் உள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படமும் திரையரங்குகளில் ரீ ரீலீஸ் செய்யப்பட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் படங்கள் மட்டும் இன்றி மற்ற நடிகர்களின் படங்களும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்களைக் கடந்த குஷி படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குஷி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாகவும் நடிகை ஜோதிகா நாயகியாகவும் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தை வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த மீண்டும் வெளியாகிறது குஷி படம்:

25 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற குஷி படம் தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் ஆதரவோடு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கில்லி படத்தை கொண்டாடியது போல குஷி படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. மேலும் படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… வைரல் போட்டோ குறித்து கலகலப்பாக பேசிய நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ

குஷி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாள சினிமாவில் புது அவதாரம் எடுத்த பேசில் ஜோசஃப் – வாழ்த்தும் ரசிகர்கள்