Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Idli Kadai: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நாளை மதுரையில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2025 21:31 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் சினிமா வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது 52-வது படமான இட்லி கடை படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்துள்ளார். இது இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள 4-வது படம் ஆகும். அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எவ்வளவு வரவேற்பு கிடைக்கின்றதோ அதே போல தனுஷ் இயக்கும் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்பத்தூரிலும் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியான பிறகு படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் தனது சொந்த அனுபவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் தனுஷ் முன்னதாக படத்தில் விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை மதுரையில் இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற உள்ளது:

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நாளை செப்டம்பர் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி மதுரையில் உள்ள தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை ப்ரீ ரிலீஸ் முடிந்தப் பிறகு படம் குறித்து என்ன விமர்சனம் வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது – பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டி

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – மாரி செல்வராஜ்