Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்டி முதல் குஷி வரை… நாளை 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Theatre Release Movies : தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்ற தொகுப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

பல்டி முதல் குஷி வரை… நாளை 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Sep 2025 16:42 PM IST

பல்டி: மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்தப் படத்தை இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கி உள்ளார். பிரபல மலையாள நடிகர் ஷான் நிகோம் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி அஸ்ரானி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் மற்றும் ஷிவ ஹரிஹரன் ஆகியோர் இணைந்து முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான STK பிரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படம் நாளை 26-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்டி படத்தின் ட்ரெய்லர் இதோ:

ரைட்: நடிகர் அருண் பாண்டியன் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் ரைட். இந்தப் படத்தை இயக்குநர் சுப்ரமணியம் ரமேஷ் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் ரைட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருண் பாண்டியன் உடன் இணைந்து நடிகர்கள் நட்டி நடராஜன், அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணார் ரமேஷ், தங்கதுரை, யுவினா, ஆதித்யா, ரோஷன் உதயகுமார், முத்துராமன், உதய் மகேஷ்,  அசோக் பாண்டியன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் நாளை 26-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரைட் படத்தின் ட்ரெய்லர் இதோ:

குஷி: நடிகர் விஜய் நாயகனாக நடித்து கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குஷி. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்களைக் கடந்துள்ள நிலையில் இன்று 25-ம் தேதி 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் இதோ: