AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் தினேஷின் பர்த்டே ஸ்பெஷல் – வேட்டுவம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பா ரஞ்சித்

Vettuvam Movie Update: நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேட்டுவம் படத்தில் இருந்து வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் தினேஷின் பர்த்டே ஸ்பெஷல் – வேட்டுவம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பா ரஞ்சித்
நடிகர் தினேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Sep 2025 20:26 PM IST

தமிழ் சினிமாவில் 2006-ம் ஆண்டு வெளியான ஈ என்ற படத்தில் சிறிய கதாப்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் தினேஷ் (Attakathi Dinesh). இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் தினேஷ் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் பா ரஞ்சித் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தினேஷ் நடித்தப் பிறகு அவரை அனைவரும் அட்டக்கத்தி தினேஷ் என்றே அழைக்கத் தொடங்கினர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக பலப் படங்களில் நடிகர் தினேஷ் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தண்டகாரண்யம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் கலையரசன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தாலும் தினேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினேஷின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட பா ரஞ்சித்:

அதன்படி தற்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கி வரும் 8-வது படமான வேட்டுவம் படத்தில் நடிகர் தினேஷ் நடித்து வருகிறார். இதில் நடிகர் ஆர்யாவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் தினேஷின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தினேஷ் ஆக்‌ஷன் காட்சியை மிகவும் சிறப்பாக செய்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு

இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Bigg Boss Tamil 9: எல்லாம் நாம பாக்குற பார்வையில தான் இருக்கு – பிக்பாஸ் தமிழ் சீசன் 9

Follow Us