Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்

One Year Of Meiyazhagan: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மெய்யழகன். இந்தப் படம் இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்
மெய்யழகன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Sep 2025 12:34 PM IST

இயக்குநர் பிரேம் குமார் (Director Prem Kumar) இயக்கத்தில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாகவும் நடிகர் அரவிந்த சாமி முன்னணி வேடத்திலும் நடித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படமாக வெளியான இந்த மெய்யழகன் படம் கடந்த 27-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டை நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், சரண் சக்தி மற்றும் சுவாதி கொண்டே என பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

தமிழ் மொழியில் உருவான இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டினர். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நானி ஒரு பேட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் தான் பார்த்தப் படங்களில் மிகவும் சிறந்த படம் மெய்யழகன் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ரசிகரக்ள் மற்றும் பிரபலங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது.

மெய்யழகன் படத்தின் ஒரு ஆண்டின் நினைவுகள்:

குடும்ப சூழல் காரணமாக தனது சொந்த ஊரை விட்டு சிறு வயதிலேயே நடிகர் அரவிந்தசாமி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு அவர் மீது பேரனபை பொழியும் நபரை சந்திக்கிறார். அவர் பெயர் என்ன என்று கூட தெரியாமல் தவிக்கும் அரவிந்தசாமி இறுதியில் அவரைப் பற்றி எப்படி தெரிந்துகொண்டார் என்பதே படத்தின் கதை. மிகவும் அழகான படமாக வெளியான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!

மெய்யழகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் கருப்பு படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!