Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bigg Boss Tamil Season 9: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 9.. எப்போது, எங்கு பார்க்கலாம்?

Bigg Boss Season 9 Tamil: மக்கள் மத்தியில் திரைப்படங்களுக்கு இணையாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பிரபலம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. அந்த நிகழ்ச்சியை எப்போது, எங்கு பார்க்கலாம் என்பது குறித்த விவரங்களை காண்போம்.

Bigg Boss Tamil Season 9: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 9.. எப்போது, எங்கு பார்க்கலாம்?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 9 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Sep 2025 17:10 PM IST

கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் (Vijay TV) வெளியாகிவரும் ரியாலிட்டி ஷோதான் பிக்பாஸ் (Bigg Boss). இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது, இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் வெளியாகிவந்தது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2006ம் ஆண்டு முதல் தொடங்கிய நிலையில், தற்போதுவரை சுமார் 19 சீசன்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியானது 8 சீசன்களாக வெளியாகியிருக்கிறது. அதில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 7 வரை கமல்ஹாசன் (kamal Haasan) தொகுத்து வழங்கினார். அதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay sethupathi) தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் நெருக்கமானார் விஜய் சேதுபதி.

மேலும் இவர், இந்த 2025ம் ஆண்டில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை எங்கு பார்க்கலாம் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியை எங்கு பார்க்கலாம் :

இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டோபர் 5ம் தேதியில் மாலை 6:30 மணி முதல் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 22 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரலையாக காணலாம்.

இதையும் படிங்க: யாரு மாற போறாங்க எப்படி மாற போறாங்கன்னு பாக்க பாக்க தான் புரியும் – பிக்பாஸ் தமிழ் சீசன் 9 புரோமோ இதோ!

இந்த ஓடிடி தளங்களில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடைபெறும் காட்சிகளை 24/7 வரை இந்த ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமாஸ் ஓடிடியில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஓடிடி தளங்களில், பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மக்கள் தங்களின் ஓட்டுக்களை வழங்கலாம்.

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ பதிவு :

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் :

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 52 படங்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ் பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் யார் தெரியுமா? அட இவரா?

அந்த வகையில் இவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி சுமார் ரூ 60 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளாராம். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது .