Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

CWC Season 6: 2வது முறையாக குக் வித் கோமாளி டைட்டிலை வென்ற ஆண் போட்டியாளர்.. சீசன் 6 வின்னர் இவர்தான்!

Cooku with Comali Season 6 Title Winner: கோலிவுட் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருவது குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியானது தற்போது 6வது சீசன் வெளியாகி வருகிறது. இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், குக்வித் கோமாளி சீசன் 6 டைட்டிலை ஆண் போட்டியாளர் வென்றுள்ளாராம்.

CWC Season 6: 2வது முறையாக குக் வித் கோமாளி டைட்டிலை வென்ற ஆண் போட்டியாளர்.. சீசன் 6 வின்னர் இவர்தான்!
குக்கு வித் கோமாளி 6 டைட்டில் வின்னர் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Sep 2025 13:55 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் சினிமா எவ்வளவு பிரபலமோ அதை போல சின்னதிரையில் ரியாலிட்டி ஷோக்களும் பிரபலம். அந்த வகையில், தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஆண்டு தோறும் வெளியாகும் ரியாலிட்டி காமெடி ஷோதான் குக் வித் கோமாளி (Cooku with Comali). இந்த நிகழ்ச்சியானது, பிரபல சின்னதிரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சமையல் போட்டியாளராக கலந்துகொள்வார்கள். அவர்களுடன் நகைச்சுவை நடிகர்கள் சிலரும் கலந்துகொள்வார்கள். அவர்களை வைத்து எவ்வாறு சமையல் செய்து வெற்றி பெறுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கியிருந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 (cooku with Comali Season 6) நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக ஷபானா ஷாஜஹான் (Shabana Shahjahan), ராஜு ஜெயமோகன் (Raju Jeyamohan), லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் உமைர் லத்தீப் என நான்கு போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், குக்வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளாராம். அது வேற யாருமில்லை, நடிகர் ராஜு ஜெயமோகன்தான். இது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது.. கலைமாமணி விருது வென்ற அனிருத் நெகிழ்ச்சி!

இணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் தொடர்பான போஸ்ட் :

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் லிஸ்ட் :

கடந்த2019ம் ஆண்டு தொடங்கிய இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் வனிதா விஜயகுமார். மேலும் சீசன் 2 நிகழ்ச்சியில் கனி திரு வெற்றி பெற்றிருந்தார். சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா, சீசன் 4ல் நடிகர் மைம் கோபி மற்றும் குக்வித் கோமாளில் சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பல்டி’ படத்திற்காக சாய் அபயங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில், இந்த 2025ம் ஆண்டில் நடைபெற்று வந்த குக்வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி அவருகிறது.

நடிகர் ராஜு ஜெயமோகனின் படம் :

கடந்த 2022ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராஜு. இவர் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக படத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனை போல, சின்னத்திரையில் இருந்து சினிமாவை நோக்கி கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் பல படங்ககளில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் , இவர் ஹீரோவாக அறிமுகமான படம் தான் பன் பட்டர் ஜாம். இப்படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.