குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் இவங்களா? வைரலாகும் தகவல்!
Cooku with Comali 6 | சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ரியால்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த சீசனின் இறுதிப் போட்டி இந்த வாரம் நடைபெறுகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி (Cook With Comali Season 6) என்ற நிகழ்ச்சி சமையல் போட்டியை காமெடி கலந்து நிகழ்ச்சியாக ஒளிபரப்பி வருகின்றனது. இந்த நிகழ்ச்சி சுமார் 5 சீசன்களாக வெற்றியடைந்து ரசிகர்களிடையே வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 6-வது சீச ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி வருகின்ற 28-ம் தேதி குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்தப் போட்டி கடந்த மே மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஒளிப்பரப்பாகிறது. இந்த குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 10 நபர்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். அதன்படி ஷபானா ஷாஜஹான், ராஜு ஜெயமோகன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், பிரியா ராமன், நந்த குமார், ஜாங்கிரி மதுமிதா, சுந்தரி, கஞ்சா கருப்பு, சௌந்தர்யா சில்லுக்குரி என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தற்போது ஷபானா ஷாஜஹான், ராஜு ஜெயமோகன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப் ஆகியோர் தற்போது இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 வின்னர் யார் தெரியுமா?
அதன்படி ஷபானா ஷாஜஹான், ராஜு ஜெயமோகன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப் ஆகியோர் இடையே இறுதிப் போட்டி வருகின்ற 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெறுகின்றது. சுமார் 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை தொடர்ந்து நிகழ்ச்சி குழு வெளியிட்டு வருகின்றது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நிலவி வருகின்றது. அதன்படி இந்த குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் ஃபைனலிஸ்டாக தேர்வான ஷபானா ஷாஜஹான் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறு அன்று தெரியும்.




Also Read… வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் புரோமோ வீடியோ:
Also Read… சூர்யாவின் கருப்பு படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!