ஜூனியர் என்டிஆரின் தேவாரா 2 படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Devara 2: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் வெளியான பலப் படங்கள் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் முன்னதாக வரவேற்பைப் பெற்ற தேவாரா படத்தின் 2-ம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் ஜூனியர் என்டிஆர் (Nandamuri Taraka Rama Rao Jr). கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான நின்னு சூடலானி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ஜூனியர் என்டிஆர். தொடர்ந்து இவர் சினிமாவில் 2025-ம் ஆண்டு வரை சினிமாவில் 24 வருடங்களாக வெற்றி நாயகனாக வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வார் 2. இதற்கு முன்னதாக தெலுங்கு சினிமாவில் தேவாரா படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.




தேவாரா 2 படம் தொடங்குகிறது – உற்சாகத்தில் ரசிகர்கள்:
இயக்குநர் கொரட்டல சிவா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர். ஆர்ட்ஸ் ஆகியவை இணைந்து தயாரிப்பாளர்கள் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read… நடிகர் தினேஷின் பர்த்டே ஸ்பெஷல் – வேட்டுவம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட பா ரஞ்சித்
தேவாரா 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s been one year since HAVOC struck the shores, trembling every coast… and the name the world remembers is #DEVARA 🌊
Be it the FEAR it unleashed or the LOVE it earned, the streets will never forget 🔥
Now gear up for #Devara2 ❤️🔥
Man of Masses @tarak9999
A #KoratalaSiva… pic.twitter.com/yi0fBsaImI— Devara (@DevaraMovie) September 27, 2025
Also Read… அப்போ மாரீசன் ஃபீல் குட் படம் இல்லையா? மிஸ் பண்ணாமல் பாருங்க!