Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

படப்பிடிப்பில் ஏற்றப்பட்ட விபத்து… நடிகர் ஜூனியர் என்டிஆர் காயம்

Jr.NTR : ஜூனியர் என்டிஆர் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றபோது லேசான காயம் அடைந்தார். இதனையடுத்து, அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக விளம்பர படக் குழுவினர் தெரிவித்தனர். ஜூனியர் என்டிஆர் தற்போது ஓய்வில் உள்ளார்.

படப்பிடிப்பில் ஏற்றப்பட்ட விபத்து… நடிகர் ஜூனியர் என்டிஆர் காயம்
ஜூனியர் என்டிஆர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2025 19:39 PM IST

பிரபல தெலுங்கு ஹீரோவான ஜூனியர் என்டிஆர், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான் இந்தியன் ஸ்டாராக உயர்ந்தார். அவர் பாலிவுட்டில் அறிமுகமான வார் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,  ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆர், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில்  காயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆருக்கு காயம்

ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் விளம்பர படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஜூனியர் என்டிஆர் காயமடைந்தார். இதனையடுத்து மருத்துவக் குழு உடனடியாக முதலுதவி அளித்தது. இந்த நிலையில்  உடல்நிலை சீராக இருப்பதாகவும், அது ஒரு சிறிய காயம் என்றும் குழுவினர் தெரிவித்தனர். அவர் தற்போது ஓய்வில் உள்ளார். ரசிகர்கள் தாரக் விரைவில் குணமடைய விரும்புகிறார்கள். இந்த விஷயம் அறிந்தவுடன் பல பிரபலங்கள்  ஜூனயர் என்டிஆருக்கு போன் செய்து அவரது நலம் குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்!

விபத்து குறித்து வெளியான அறிக்கை

 

விபத்து குறித்து ஜூனியர் என்டிஆர் டீமில் இருந்து வெளியான அறிக்கையில், ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவர் முழுமையாக குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும். என்டிஆரின் உடல்நிலை சீராக உள்ளது. ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எந்த தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு நாங்கள் மனதார கேட்டுக்கொள்கிறோம், என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன் – ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல் ஹாசன்

சமீபத்தில் வார் 2 படத்தின் மூலம் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படத்தில், ஹிருத்திக் ரோஷனை எதிர்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். ஜூனியர் என்டிஆர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் படத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார். அந்த வகையில், ஜிம்மில் அவர் வியர்த்துக் கொட்டும் நிலையில் ஒர்க் அவுட் செய்வது போன்ற வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திய காயம் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாகத் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.