Rishab Shetty: காந்தாரா சாப்டர் 2 உருவாகுமா? ரிஷப் ஷெட்டி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!
Rishab Shetty About Kantara Universe: கன்னட சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் முன்னணி நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தின் கதையை பற்றி பேசிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா சாப்டர் 1ன் பட தொடர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவரின் இயக்கத்தில் வெளியாகி உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த படம்தான் காந்தாரா (Kantara). கடந்த 2022ம் ஆண்டு இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியானது. அதை தொடர்ந்து, காந்தாரா படத்திற்கு முன் நடந்த கதையை கொண்டு உருவாகியுள்ளபடம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்திலும் நடிகர் ரிஷப் ஷெட்டிதான் முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது வரும் 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் மீது ஒட்டுமொத்த மக்களும் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரிஷப் ஷெட்டி, அதில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் தொடர்ச்சியை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : சிலம்பரசனின் ‘STR49’ படத்தின் புரோமோ வீடியோ – ரிலீஸ் எப்போது தெரியுமா?
காந்தாரா திரைப்படத்தின் தொடர்ச்சி கதைகள் பற்றி பேசிய ரிஷப் ஷெட்டி:
அந்த நேர்காணலில் காந்தாரா சாப்டர் 1 படம் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிஷப் ஷெட்டி, பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போதுதான் அவர், காந்தாரா படத்தின் கதையை வைத்து, அதன் தொடர்ச்சியை எளிதாக உருவாக்கலாம் என கூறியுள்ளார். அதில் நடிகர் ரிஷப் ஷெட்டி, ” காந்தார அப்படத்தின் கதையை எவ்வளவு வேடுமானாலும் விரிவாக்கிக்கொள்ளலாம். முதல் பார்ட்டின் போஸ்டரை நாங்கள் வெளியிடும்போது, ஒரு நெருப்பு நிறைந்த வட்டத்தை காட்டினோம். அதுபோல, இரண்டாவது பாகத்தின் முதல் பார்வையில் ஒரு கிணற்றுக்குள் இருந்து மேலே ஒரு வட்டத்தை பார்ப்பதுபோல காட்டியிருக்கிறோம்.
இதையும் படிங்க : நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு
மேலும் அந்த வட்டம் மற்றும் இந்த கிணறுக்குள் இப்போது போல காட்சியில் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். இப்படத்தின் கதையும் எப்படிவேண்டும் என்றாலும் அமைக்கலாம்” என ரிஷப் ஷெட்டி அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் தொகுப்பாளர் அவரிடம் ரிஷப் ஷெட்டி தனக்கென ஒரு யுனிவர்ஸ் பட தொகுப்பை உருவாக்கிவிட்டாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு ரிஷப் ஷெட்டியும் ஆமாம் என பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் மக்களிடையே வைரலாகி வருகிறது.
ரிஷப் ஷெட்டி வெளியிட்ட காந்தாரா சாப்டர் 1 ட்ரெய்லர் பதிவு:
Thank you for all the Support Sir😍 https://t.co/ZvwGx7G46m
— Rishab Shetty (@shetty_rishab) September 22, 2025
காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் எப்போது :
ரிஷப் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்தின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது மிக பிரம்மாண்ட படமாக தயாராகியுள்ளது. வரும் 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகவும் நிலையில், தமிழகத்தில் காலை 6 மணி காட்சி அல்லது 9 மணி காட்சிகள் முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.