முந்தானை முடிச்சு படத்தில் விளக்கு வச்ச நேரத்திலே பாடல் உருவான விதம் – பாக்யராஜ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
Bhagyaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் இருந்தவர் பாக்யராஜ். 80 மற்றும் 90களில் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முந்தானை முடிச்சு படத்தில் பாடல் உருவான விதத்தை பாக்யராஜ் பேசியது வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் (Actor Bhagyaraj). இவர் இயக்கிய படங்களும் நடித்தப் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அடல்க்ட் கண்டெண்டுகளை பார்க்கும் ரசிகர்களின் முகம் சுழிக்க வைக்காமல் எடுத்து பிரமலானார். முருங்கையாய் இவரது படத்தின் மூலம் எவ்வளவு ஃபேமஸ் ஆனது என்பது பலரும் அறிந்த விசயமே. இப்படி இருக்கும் நிலையில் இவர் இயக்கி நாயகனாக நடித்தப் படம் தான் முந்தானை முடிச்சு. 22-ம் தேதி ஜூலை மாதம் 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் நடிகை ஊர்வசி நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் தனது மனைவி உயிரிழந்துவிட கைக் குழந்தையுடன் ஊர்வசி இருக்கும் கிராமத்திற்கு வாத்தியார் வேலைக்கு வருகிறார் பாக்யராஜ். அவரிடம் ஊர்வசியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பல சேட்டைகள் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் பாக்யராஜ் மீது காதல் ஏற்பட்டதால் ஊர்வசி பொய்யான விசயத்தை சொல்லி அவரை திருமணம் செய்துக்கொள்கிறார். முதலில் ஊர்வசி மீது வெறுப்பாக இருக்கும் பாக்யராஜிற்கு பிறகு அவரைப் பிடித்துவிடுகிறது. இதுதான் படத்தின் கதை.
விளக்கு வச்ச நேரத்திலே பாடல் உருவானது இப்படிதான்:
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் பாடல் இசையமைத்து இருந்தார். அவரிடம் விளக்கு வச்ச நேரத்திலே பாடலுக்கு இசையமைக்க பாக்யராஜ் கூறியபோது அவர் முதலில் மறுத்துவிட்டதாக விழா ஒன்றில் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
அதற்கு என்ன காரணம் என்று பாக்யராஜ் கேட்டபோது நான் மாலை போட்டு இருக்கேன் இப்படி எல்லாம் பாடமாட்டென் என்று கூறியுள்ளார் இளையராஜா. அதுகுறித்து விவரமாக கூறிய பாக்யராஜ் அந்தப் பாடலில் முதலில் விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தன்… மறைஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான் என்று எழுது கொண்டு போனேன். அது ஆபாசமாக இருக்கிறது என்று கூறிய இளையராஜா விளக்கு வச்ச நேரத்திலே பாடலை இறுதியாக பாடினார்.
Also Read… கரூர் சம்பவம்… விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!
அப்பறம் பாடிட்டு இருந்தவரு கடைசி வரி வரும் போது விளக்கு வச்ச நேரத்திலே தன்னானனா… மறைஞ்சு நின்னு பாக்கையிலே தனனானா என்றார். உடனே நான் சொன்னேன் நான் எழுதுன வரிய விட இதுதான் கிளுகிளுப்பா இருக்கு என்று கூறி அந்த நிகழ்வில் உள்ளவர்களை எல்லாம் சிரிப்பில் ஆழ்ந்தினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.