கவினின் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
Kavins Mask Movie: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது மாஸ்க் படத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் நடிகர் கவின் (Actor Kavin). நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆன போதே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் நாயகனாக கலம் இறங்கினார் நடிகர் கவின். தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகரக்ளிடையே நல்ல அவரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி லிஃப்ட் படத்தில் இருந்து தொடர்ந்து டாடா, ஸ்டார் மற்றும் கிஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கிஸ்.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் குமார் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் கிஸ் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.




மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த மாஸ்க் படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் முதல் சிங்கிள் எப்போது ரிலீஸாகிறது என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதில் வருகின்ற 30-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
Also Read… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாய் பல்லவி – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“Alexa, play a GV Prakash song”#Mask pic.twitter.com/ydtTDqo3KZ
— Kavin (@Kavin_m_0431) September 27, 2025
Also Read… யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்