Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளையராஜா இசையின் மூலம் பெற்ற வருமானம் எவ்வளவு? சோனி மியூசிக் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Ilaiyaraaja : சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை அக்டோபர் 22, 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையின் மூலம் பெற்ற வருமானம் எவ்வளவு? சோனி மியூசிக் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இளையராஜா
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Sep 2025 16:24 PM IST

இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மக்களுக்கு சிறந்த பாடல்களை வழங்கி வருகிறார். தற்போது வெளியாகும் பிற படங்களிலும் அவரது ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவர் தனது பாடல்களை தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சோனி மியூசிக் நிறுவனம் தயாரிப்பாளர்களுக்கு பாடல் உரிமையை வழங்கி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 26, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.

காப்புரிமை குறித்து இளையராஜாவின் வழக்கு

இசையமைப்பாளர் இளையாராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி மியூசிக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களின் உரிமையை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நிறுவனம் தொடர்ந்து தனது பாடல்களின் உரிமையை விற்பனை செய்து வருகிறது. பாடல்களின் உரிமையை நான் யாருக்கும் தரவில்லை. அதற்கான உரிமையை பிறருக்கு வழங்கவில்லை என தனது மனுவில் இளையராஜா பதிவு செய்திருந்தார்.

இதையும் படிக்க : இளையராஜா எனக்கு அண்ணனும் கூட.. கமல்ஹாசன் எமோஷனல் ஸ்பீச்!

இந்த நிலையில் இந்த வழக்கு செப்டம்பர் 26, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளையராஜாவின் இசையை பயன்படுத்தி பெற்ற வருமானத்தை தாக்கல் செய்ய சோனி மியூசிக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 22, 2025 அன்று ஒத்தி வைத்தனர்.

வழக்கின் பின்னணி

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை கேசட்டுகளாக விற்கும் உரிமைைய எக்கோ என்ற நிறுவனத்துக்கு அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எக்கோ நிறுவனம் இளையராஜாவின் பாடல்களின் உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்துக்கு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இளையராஜாவின் தரப்பு தான் எக்கோ நிறுவனத்துக்கு பாடல்களை கேசட்டுகளில் விற்க மட்டுமே உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை டிஜிட்டல் தளங்களில் வெளியிடும் உரிமையை வழங்கவில்லை எனவும் அதற்கான உரிமை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தது. இது தான் பிரச்னையின் ஆரம்புள்ளி என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்… நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படக்குழுவிடம் நஷ்ட ஈடு கோரி இளையராஜா நோட்டீஸ்

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் இளையராஜா பாடல்கள்

இளையராஜாவின் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர் இசையமைக்கும் படங்கள் போல பிற இசையமைப்பாளர்களின் படங்களிலும் அவரது ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் வா வா பக்கம் வா என்ற தங்கமகன் பாடல் பயன்படுத்தப்பட்டது. அதே போல கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லோகா படத்தில் அவர் மலையாளத்தில் இசையமைத்த கிளியே கிளிேயே என்ற பாடல் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த இரண்டு பாடல்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.