அந்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்- நடிகை கயாடு லோஹர் பேச்சு!
Kayadu Lohar: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில், சிலம்பரசனின் STR49 படத்திலும் இவர் நடிகையாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியான படம்தான் டிராகன் (Dragon). இந்த படத்தில் இரு முன்னணி கதாநாயகிகள் நடித்திருந்தனர். அதில் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஏற்கனவே படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படமாக அமைந்தது டிராகன் திரைப்படம். இந்த படமானது மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் நடிகர் சிலம்பரசன் (SIlambarasan) மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணனின் கூட்டணியில் உருவாகும் படமும் ஒன்று.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கயாடு லோஹர். சிலம்பரசனுடன் நடிக்கவுள்ள படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : இட்லி கடை படத்திலிருந்து வெளியானது புதிய போஸ்டர் – வைரலாகும் பதிவு
சிலம்பரசன் படம் பற்றி பேசிய கயாடு லோஹர்:
அந்த நேர்காணலில் நடிகை கயாடு லோஹர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து அதில் அவர் சிலம்பரசனுடன் ஒப்பந்தமான STR49 படம் பற்றி பேசியுள்ளார். அந்த நேர்காணலில் கயாடு லோஹர், “STR49 படத்திற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் வெளியீடு எப்படி இருக்கும், எனது கதாபாத்திரத்தை மக்கள் எப்படி பார்ப்பார்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் இன்னும் சிலம்பரசன் சாரிடம் அதிகமாக பேசியதில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையின்போது பேசியதுதான். இந்த படத்திற்கு முன்னே சிலம்பரசன் சாரின் ஒரு படத்தின் டெஸ்ட் லுக்கிற்காக சென்றேன். அது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சாரின் படம்தான்.
இதையும் படிங்க : ஷூட்டிங் இல்லாதபோது எனது அன்றாட வாழ்க்கை இப்படிதான் இருக்கும் – சூர்யா ஓபன் டாக்!
நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
Can’t wait for you all to experience the world of our Pallichattambi ❤️🧿✨@DijoJoseAntony @ttovino @JxBe pic.twitter.com/u1auoJtqil
— Kayadu Lohar (@11Lohar) June 28, 2025
வெந்து தணிந்தது காடு திரைப்படம்தான், சில காரணங்களால் அந்த படமும் கைவிட்டுப்போனது. அதை தொடர்ந்து இந்த STR49 பட ஷூட்டிங்கின்போது சிலம்பரசனிடம் பேசினேன். அப்போது அவரிடம் வெந்து தணிந்தது படத்தின் நடிக்கவேண்டியிருந்தது பற்றி அவரிடம் கூறியிருந்தேன். அவரும் என்னிடம் தெரியும் என கூறியிருந்தார்” என்று நடிகை கயாடு லோஹர் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.