Kayadu Lohar: நான் சிலம்பரசனுடன் நடிக்கவிருந்த முதல் படம் அதுதான் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
Kayadu Lohar About First Movie With Simbu: தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான நடிகைதான் கயாடு லோஹர். இவர் தொடர்ந்து, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிம்புவுடன் முதலில் நடிக்கவிருந்த படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் 2வதாக வெளியான திரைப்படம்தான் டிராகன் (Dragon). இந்த படமானது கடந்த 2025 ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் மிகவும் பிரபலமானார். இவருக்கு இதுதான் தமிழ் சினிமாவில் முதல் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகிவரும் இமார்ட்டல் (Immortal), அதர்வாவின் இதயம் முரளி மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்டார். அதில் பேசிய கயாடு லோஹர், சிலம்பரசனுடன் முதலில் நடிக்கவிருந்த படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அவர் முதலில் சிலம்பரசனின் “வெந்து தணிந்தது காடு” (Vendhu Thanindhathu Kaadu) படத்தில் நடிப்பதற்கு லுக் டெஸ்ட் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது பற்றி விளக்கமாக பார்க்கலாம்
இதையும் படிங்க : இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் போஸ்ட்
சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படம் பற்றி பேசிய கயாடு லோஹர்:
அந்த நேர்காணலில் நடிகை கயாடு லோஹர், தான் நடித்து வரும் புதிய படங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில், சிலம்பரசன் நடித்திருந்த வெந்து தணிந்தது காடு படத்தில்தான் தமிழில் முதலில் அறிமுகமாகவிருந்தேன். அந்த படத்திற்கான லுக் டெஸ்ட்டின்போதுதான், இந்த படத்தில் எனது லுக் செட்டாகவில்லை என சொன்னார்கள்.
இதையும் படிங்க : சிலம்பரசனின் ‘STR49’ படத்தின் புரோமோ வீடியோ – ரிலீஸ் எப்போது தெரியுமா?
அப்போதுதான் நான், சிலம்பரசன் சாரிடம் கொஞ்சம் பேசியிருக்கிறேன். அதன்பிறகு STR49 பட பூஜையின்போது, அவரிடம் வெந்து தணிந்தது காடு படத்தின் டெஸ்ட் லுக்கின் போது பேசியதை பற்றி அவரிடம் கேட்டேன் அவரும், என்னிடம் நன்றாக பேசினார்” என்று நடிகை கயாடு லோஹர் அண்ட் நேர்காணலில் பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு படம் பற்றி கயாடு லோஹர் பேசிய வீடியோ பதிவு :
#KayaduLohar Recent
– Simbu and I were supposed to do a film. We even did the Photo Shoot.
– It’s GVM sir’s VTK film. The two of us had even done a look test for the film.pic.twitter.com/ZLSfhfl7Cl— Movie Tamil (@_MovieTamil) September 27, 2025
நடிகை கயாடு லோஹரின் புதிய படங்கள் :
நடிகை கயாடு லோஹர் தமிழில் டிராகன் படத்தை தொடர்ந்து, கிட்டத்தட்ட 3 படங்களில் தமிழில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதர்வாவுடன் இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் இமார்ட்டல் மற்றும் சிலம்பரசன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி படம் என 3 தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிகர் டோவினோ தாமஸின் நடிப்பிலும், ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.