டிராகன் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஓபனாக பேசிய கயாடு லோஹர்
Kayadu Lohar: கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் நடித்து வருபவர் நடிகை கயடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னட சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான முகில்பேட்டை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை கயாடு லோஹர் (Actress Kayadu Lohar). இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான ட்ராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி அடுத்ததாக நடிகை கயாடு லோஹர் நடிப்பில் இதயம் முரளி தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது நடிப்பில் வெளியான படங்கள் குறித்தும் அதனால் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.




டிராகன் ஷூட்டிங் ஸ்பாட்தான் எனக்கு மிகவும் பிடித்தது:
அதில் டிராகன் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நடிகை கயாடு லோஹர் டிராகன் படப்பிடிப்பு தளம் தான் எப்போதும் அவருக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனக்கு அதிகமாக ஊக்கத்தை அளித்ததாகவும் அதன் காரணமாகவே படத்தில் அவரது கதாப்பாத்திரம் சிறப்பாக அமைந்தது என்றும் நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
Also Read… யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்
நடிகை கயாடு லோஹர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#KayaduLohar Recent
– #Dragon shooting spot has always been my best shooting experience.
– I had so much fun. From day one, #Ashwath was always confident about me.
– He always said, “Believe me, believe me.”pic.twitter.com/CsUKLXK6Rh— Movie Tamil (@_MovieTamil) September 27, 2025
Also Read… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாய் பல்லவி – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்