Suriya: ஷூட்டிங் இல்லாதபோது எனது அன்றாட வாழ்க்கை இப்படிதான் இருக்கும் – சூர்யா ஓபன் டாக்!
Suriya About Family Time: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது. அந்த வகையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, ஷூட்டிங் இல்லாதபோது தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை சுமார் 44 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து, மேலும் புதிய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் வெளியான “நேருக்கு நேர்” (Nerukku Ner) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தனது முதல் படத்தில் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் கலக்கியிருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னம் (Mani Ratnam), கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா உட்பட பல்வேறு பிரபலங்களின் இயக்கத்தில் படங்ககளில் நடித்திருக்கிறார். அதிலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் (Gautham Vasudev Menon) இயக்கத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை சூர்யா கொடுத்திருக்கிறார்.




இதையும் படிங்க : பொது இடங்களில் திடம் வேண்டும்.. சாய் பல்லவி சொன்ன விஷயம்!
இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, படங்களின் ஷூட்டிங் இல்லாதபோது, தனது குடும்பத்துடன் எவ்வாறு நேரத்தை செலவிடுவார் என்பது பற்றி தெரிவித்திருக்கிறார்.
ஷூட்டிங் இல்லாதபோது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது பற்றி சூர்யா பேச்சு :
அந்த நேர்காணலில் சூர்யா, நான் கிட்டத்தட்ட சுமார் 20 நாட்களுக்கும் மேல் படங்களின் ஷூட்டிங் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறேன். இந்த இருபது நாட்களில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேல் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு முயற்சிப்பேன். மேலும் என்னுடைய வீட்டில் கூபி என்ற நாய்குட்டி ஒன்று இருக்கிறது. அதனுடன் கொஞ்சி விளையாடுவேன். மேலும் ஜோதிகா இருப்பார், எனது குழந்தைகளும் இருப்பார்கள்.
இதையும் படிங்க : விஜய்யின் நம்பரை இப்படித்தான் சேவ் பண்ணிருக்கேன்- திரிஷா பகிர்ந்த தகவல்!
மேலும் எனது குழந்தைகளின் பள்ளிக்கு மீட்டிங் செல்வேன். தொடர்ந்து எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன். அவர்களுடன் இருக்கும் அந்த 10 நாட்களிலும் அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு விரும்புவேன். பிறகு எனது தேவைகளை பூர்த்திசெய்துகொள்வேன். மேலும் எதாவது முக்கியமான விஷங்களை பார்க்கவேண்டியது இருந்தால் அதையும் செய்துமுடிப்பேன்” என்று நடிகர் சூர்யா அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.
நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
Your presence made every second count Sir, this celebration was our way of honoring every hand that shaped #Agaram ’s 15 year journey. Thank you for being with us! https://t.co/Kk8jioFCN2
— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2025
மேலும் சூர்யாவின் நடிப்பில் கருப்பு மற்றும் சூர்யா46 போன்ற திரைப்படங்களானது உருவாகிவருகிறது. இந்த 2 படங்களும் வரும் 2026ம் ஆண்டில்தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.