Sai Pallavi: பொது இடங்களில் திடம் வேண்டும்.. சாய் பல்லவி சொன்ன விஷயம்!
Sai Palavi About Saree Comfort: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வருகிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தான எப்போதுமே சேலை கட்டுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் (Premam) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் சாய் பல்லவி (Sai Pallavi). இந்த படத்தை இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். காதல் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தை தொடர்ந்து, மலையாள படங்கள் இவருக்கு குவிய தொடங்கியது. மேலும் தமிழில் இவர் தனுஷ் (Dhanush) நடிப்பில் வெளியான மாரி 2 (Maari 2) படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார். தமிழிலும் தனது முதல் படத்திலே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் சாய் பல்லவி. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினர். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது என்றே கூறலாம். அந்த வகையில் தமிழில் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் அமரன் (Amaran).
நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.




இதையும் படிங்க : இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் போஸ்ட்
மேலும் தற்போது இந்தி படங்களில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தான் எப்போதும் பொது இடங்களில் சேலை கட்டி வருவதற்கான கரணம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
சாய் பல்லவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
ட்ரெடிஷனல் உடை அணிவது பற்றி சாய் பல்லவி பேச்சு :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் சாய் பல்லவியிடம் , நீங்கள் எப்போதுமே ஏன் பொது இடங்களில் சேலை கட்டி வருகிறீர்கள், இதற்கு எதாவது காரணம் இருக்கிறதா ? என கேட்டார். அதற்கு பதிலளித சாய் பல்லவி, சேலைதான் எனக்கு மிகவும் வசதியான விஷயம் என்று கூறலாம். சில நிகழ்ச்சிகளுக்கு நானும் வேறு உடையில் சென்றிருக்கிறேன். ஆனால் சேலையில் இருந்த வசதி மற்றும் நிம்மதி மற்ற எந்த உடைகளிலும் எனக்கு இல்லை. மேலும் பொது நிகழ்ச்சிகள் என்றாலே மிகவும் அழுத்தங்கள் இருக்கும் இடமாக இருக்கும், நான் அந்த நிகழ்ச்சி எப்படி பேசுகிறேன் என்ற எண்ணத்தை தாண்டி, நான் போட்டுவந்த உடையில் துணி விளங்குகிறதா என எனது சிந்தனை முழுவதும் அதிலே செல்லும்.
இதையும் படிங்க : விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் – வைரலாகும் போட்டோ!
ஒரு நிகழ்ச்சி என்றால் எனது வேலை அதில் எனது மனதில் இருப்பதை தெளிவாக பேசவேண்டும் என்பதுதான், அதில் பாதி மனநிலை துணியில் கவனம் செலுத்தவேண்டாம் என எப்போது எனது வசதியான உடைகளை அணிவேன். அதற்கு சேலை மட்டும்தான் கட்டவிடும் என்று இல்லை, நான் சேலை கட்டி ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது மிகவும் வசதியாகவும் மற்றும் திடமாகவும் உணர்கிறேன். அதன் காரணமாகத்தான் பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சேலையில் செல்கிறேன்” என நடிகை சாய் பல்லவி அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.