Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தல டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் போட்டியாளர்களிடையே தீயாய் நடைபொற்று வருகின்றது. இந்த நிலையில் டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே சண்டை ஏற்படும் வீடியோ வைரலாகி வருகின்றது.

தல டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Oct 2025 14:00 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Ramil Season 9) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டையும் தொடங்கிவிட்டது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரம் முடிவதற்கு முன்பாகவே போட்டியில் இருந்து நந்தினி என்ற போட்டியாளர் வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார். அவர் தொடர்ந்து உள்ளே உள்ள மற்ற போட்டியாளர்களை பயமுறுத்தும் விதமாக நடந்துக்கொண்டதாகவும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதனால் தான் அவரை போட்டியில் தங்கவைக்க பிக்பாஸ் முயற்சிக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து முதல் வார எவிக்சனும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைப்பெற்றது. அதில் இயக்குநர் பிரவீன் காந்தி குறைவான வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைப்பெற்ற நாமினேஷன் ப்ராசசில் கெமி, கம்ருதின், அரோரா, ரம்யா ஜோ, திவாகர், அக்‌ஷரா, சபரி, எஃப்ஜே, பார்வதி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற நபராக பார்வதி உள்ளார். இவரை இந்த வாரம் 15 போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கலையரசனை 12 பேர் நாமினேட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைப்பெற்ற சீசக்னகளில் இதுதான் அதிகம் பெற்ற ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தல டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை:

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நேற்று முதல் தொடங்கியது. முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடைப்பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க்கை மையப்படுத்தி மாஸ்க் என்ற பெயரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இறுதியாக வெற்றிப்பெறும் வீட்டாருக்கு சிறந்த டின்னர் வழங்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் பல வியூகங்கள் உடன் இந்தப் போட்டி நடைப்பெற்று வருகின்றது. அதில் பல சண்டைகளும் நடைப்பெற்று வருகின்றது. அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் இந்த வார வீட்டு தல டாஸ்க் இதுவா? வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… #Love சீரிஸிக்காக ஒன்றிணைந்த அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி!