சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் – மமிதா பைஜூ
Mamitha Baiju : மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் நடிப்பதன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜு. இவர் நடிகர் சூர்யா குறித்து பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடிகையாக வலம் வருகிறார். முன்னதாக மலையாள சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடிகை மமிதா பைஜூ (Actress Mamitha Baiju) தற்போது நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான பிரேமலு என்ற படம் தென்னிந்திய சினிமாவில் இவரை பிரபல நடிகையாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரேமலு படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பலப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 4 படங்களில் நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் இணைந்து ஜன நாயகன் படத்திலும், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இரண்டு வானம், பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து டியூட், சூர்யா உடன் இணைந்து அவரது நடிப்பில் உருவாகி வரும் 46-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது டியூட் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்:
அதன்படி டியூட் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் நாகர்ஜுனாவிடம் பேசிய நடிகை மமிதா பைஜூ சூர்யா 46 படம் குறித்து பேசினார். அப்போது சூர்யா சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் அவரை மிகவும் ரசிப்பேன் என்று நடிகை மமிதா பைஜூ பேசியது தற்போது சூர்யா ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நிஜமாவே விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவிற்கு நிச்சயம் முடிந்ததா? வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜுவின் பேச்சு:
• #Suriya sir is my inspiration and I admired him so Much – #MamithaBaiju in #BiggBossTelugu9
pic.twitter.com/lEFp8TaST2— Telugu Suriya Fans™ (@Suriya_TFC) October 12, 2025
Also Read… Mari Selvaraj: வாழை 2 உருவாகிறதா? எனக்கு அப்படி படம் பண்ணனும் என ஆசை – மாரி செல்வராஜ் ஓபன் டாக்!