ஃபயர் மோடில் விஜய் சேதுபதி… பதட்டத்தில் போட்டியாளர்கள் – வைரலாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீடியோ!
Bigg Boss tamil Season 9: கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே ஃபயர் மோடில் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9). கடந்த 8-வது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதன்படி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2 வருடங்களாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் கடந்த 8-வது சீசனின் நடிகர் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீசனிலாவது தவறாக நடந்துகொள்ளும் போட்டியாளர்களின் விஜய் சேதுபதி கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.
அதன்படி இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் 20 பேரைப் அறிமுகம் செய்ததோடு ஒரு வாரத்திற்கு பிறகு இன்று போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்து பேசுகிறார். அதன்படி இந்த வாரம் முழுவதும் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து என்ன பேசுவார் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




ஆதிரையை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி:
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 6-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த ப்ரோமோ வீடியோ தொடங்கியபோதே போட்டியாளர்களை வரிசையாக அவர்களை அறிமுகம் செய்துகொள்ள சொல்கிறார் விஜய் சேதுபதி.
அப்போது சபரி, விக்ரம், எஃப்ஜே, பிரவீன் ராஜ் ஆகியோர் எழுந்து நின்று தங்களை அறிமுகம் செய்துகொள்கின்றனர். அதனைத் தொடந்து 5-வதாக அமர்ந்து இருந்த ஆதிரை அமர்ந்துகொண்டே கையை தூக்கி அறிமுகப்படுத்திக்கொள்கிறார். உடனே அதுகுறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி இந்த வாரம் முழுவதும் ஆதிரை பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ:
#Day6 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/rUuFRWGHnw
— Vijay Television (@vijaytelevision) October 11, 2025
Also Read… Sai Abhyankkar: மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!