நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் ட்ரெய்லர்!
Diesel Movie Trailer: நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டீசல். இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டீசல். இந்தப் படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுக இயக்குநருடன் பணியாற்றிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மனப்பெண்ணே, பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து என இந்தப் படங்கள் அனைத்தும் அறிமுக இயக்குநர்களால் இயக்கி நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் வெற்றியடைந்தது போல தற்போது உருவாகியுள்ள டீசல் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த டீசல் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அதுல்யா ரவி, வினய் ராய், பி. சாய் குமார், கருணாஸ், அனன்யா, காளி வெங்கட், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சாய் கிருஷ்ணா, சச்சின் கெடேகர், ரவி வெங்கட்ராமன், ஜாகீர் உசேன், கேபிஒய் தீனா, தங்கதுரை, அபூர்வ சிங் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.




நாளை வெளியாகிறது டீசல் பட ட்ரெய்லர்:
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த டீசல் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் நாளை 10-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Also Read… ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்
டீசல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s time to pump in the energy 🔥#Diesel – TRAILER FROM TOMORROW, 5PM ⛽
Get set for the #DieselDiwali blasting in theatres on October 17th!@iamharishkalyan @AthulyaOfficial @shan_dir @ThirdEye_Films @devarajulu29 @thespcinemas pic.twitter.com/oxxedA1mgd
— Third Eye Entertainment (@ThirdEye_Films) October 9, 2025
Also Read… தண்ணீருக்காக பிக்பாஸ் வீட்டில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் ஆதிரை – வைரலாகும் வீடியோ