காந்தாரா சாப்டர் 1 படத்தை வெகுவாகப் பாராட்டிய ராஜ்குமார் பெரியசாமி
Kantara Chapter 1: கன்னட சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா சாப்டர் 1. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பான் இந்திய அளவில் வெற்றியைப் பெற்று வரும் நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

கன்னட சினிமாவை உலக அளவில் அறிமுகப்படுத்திய படம் என்று ரசிகர்கள் கூறுவது காந்தாரா தான். இயக்குநர் ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கன்னட சினிமாவில் வெளியாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கன்னட சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தான் முன்னதாக வெளியானது என்றும் முதல் பாகம் அடுத்ததாக தான் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி முதல் பாகத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். அதன்படி காந்தாரா சாப்டர் 1 படத்தின் பணிகள் முடிவடைந்ததும் கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 6 நாட்களை கடந்துள்ள நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது வரை இந்தப் படம் ரூபாய் 427.5 கோடிகள் உலக அளவில் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது மட்டும் இன்றி பிரபலங்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதன்படி காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்துள்ள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.




இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு கொடுத்த விமர்சனம்:
காந்தார அத்தியாயம் 1 என்பது மாய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் வேரூன்றிய ஒரு காட்சிக் காட்சி. இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, தனது கைவினைத்திறன் மற்றும் உணர்ச்சிமிக்க நடிப்பின் மூலம் படத்தின் முதல் நிமிடத்திலிருந்து கடைசி நிமிடத்திற்கு அப்பால் நம்மை அதில் மூழ்கடித்து விடுகிறார். தொலைநோக்கு பார்வை கொண்ட தயாரிப்பாளர் ஐயா, மற்றொரு பெரிய முயற்சியை மேற்கொண்டதற்காக ஹோம்பலே பிலிம்ஸில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#KantaraChapter1 is a ‘visual spectacle’ rooted in mystic culture and folk lore. Director & Actor @shetty_rishab keeps us immersed in it from the 1st min and beyond the last minute of the film through his craft and passionate performance. Congrats and respect to the visionary…
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) October 8, 2025
Also Read… சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ