Suriya46: நியூ லுக்கில் சூர்யா.. ஐரோப்பாவில் நடைபெறும் சூர்யா46 பட ஷூட்டிங்!
Suriya46 Shooting Update : சூர்யாவின் நடிப்பில் படங்கள் தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இவர் கைகோர்த்திருக்கும் படம்தான் சூர்யா46. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்கும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தமிழில் கருப்பு (Karuppu) திரைப்படத்தை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இவர் நடிக்கும் படம்தான் சூர்யா46. இந்த திரைப்படத்தை வாத்தி (Vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்ககளை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகிவரும் நிலையில், இந்த சூர்யா46 (suriya46) படமும் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025 மே மாதம் தொடங்கிய நிலையில், அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது ஐரோப்பாவில் (Europe) உள்ள பெலாரஸ் (Belarus) என்ற இடத்தில் நடைபெற்றுவருகிறதாம். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
இணையத்தில் வைரலாகும் சூர்யா46 பட ஷூட்டிங் புகைப்படம் :
The shooting of #Suriya46 is currently taking place in Belarus, Europe.#Karuppu | #Suriya pic.twitter.com/HjoDzI2dK3
— Movie Tamil (@_MovieTamil) October 7, 2025
நடிகர் சூர்யாவின் இந்த புகைப்படமானது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. சூர்யாவின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ திரைப்படம் வெளியாகி ஹிட்டான நிலையில், அதை தொடர்ந்து கருப்பு மற்றும் சூர்யா46 என இரு படங்கள் மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.
இந்த சூர்யா46 படத்தை சித்தாரா பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தயாராகிவரும் இப்படம் வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் கருப்பு பட ரிலீஸ் எப்போது :
நடிகர் சூர்யா மற்றும் திரிஷாவின் முன்னணி நடிப்பில் தயாராகிவரும் படம்தான் கருப்பு. இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருந்துவருகிறது.
இதையும் படிங்க: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
இந்த படமானது கடவுள் தொடர்பான கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.