Suriya46: சூர்யா46 படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடிப்பவர் இவரா? வைரலாகும் தகவல்!
Suriya46 Movie Update: தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூர்யா46. இந்த படத்தில் நடிகர் சூர்யா வித்யாசமான வேடத்தில் நடிக்கும் நிலையில், இதில் அவரின் அம்மா வேடத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கிறாராம். அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 44 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இப்படமானது கடந்த 2025 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் “கருப்பு” (Karuppu) என்ற படத்திலும் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா இணைந்து நடித்துவரும் படம் சூர்யா46 (Suriya46).
இப்படத்தின் ஷூட்டிங்கானது ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவின் அம்மா வேடத்தில், பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை, நடிகை ராதிகா தான் (Radhika). இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : பெரிய இயக்குநர் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் – ஜோஜூ ஜார்ஜ் சொன்ன விசயம்
சூர்யா 46 படத்தை பற்றி சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thank you team ❤️ https://t.co/lIuQxBxwIi
— Suriya Sivakumar (@Suriya_offl) July 31, 2025
சூர்யா46 படத்தின் ரிலீஸ் எப்போது :
நடிகர் சூர்யா மற்றும் வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தை, சித்தாரா பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை நமிதா பைஜூ நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்
தற்காலிகமாக சூர்யா46 என அழைக்கப்பட்டுவரும் இப்படத்திற்கு படக்குழு, “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” என்ற டைட்டிலை வைக்க திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சூர்யாவின் புதிய படம் :
சூர்யா46 படத்தை அடுத்ததாக நடிகர் சூர்யா, மலையாள இயக்குநர் ஒருவரின் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. நடிகர் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தை இயக்கிய, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் இணையவுள்ளாராம்.
இந்த படமானது சூர்யா47 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.