போற போக்கில் ஒரு லுக்க வுட்டு என்ன செஞ்சிட்டாளே – 9 வருடங்களைக் கடந்தது ரெமோ படம்
9 Years Of Remo Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் முன்னதாக வெளியான ரெமோ படம் இன்றுடன் 9 வருடங்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் கடந்த 07-ம் தேதி அக்டோபர் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெமோ. இந்தப் படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் எழுதி இயக்கி இருந்தார். இது இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது நடிகர் லாரன்ஸை வைத்து பென்ஸ் என்ற படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாய்கனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரெமோ படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைப் படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரெமோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அன்சன் பால், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், ராஜேந்திரன், யோகி பாபு, அருண்ராஜா காமராஜ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, சுவாமிநாதன், குழந்தை ரக்ஷா சவுகான், கல்யாணி நடராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராகுல் தாத்தா, பிரதாப் கே. போத்தன், ஸ்ரீ திவ்யா, ராஜு சுந்தரம் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் கதை என்ன?
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மருத்துவராக நடித்து இருப்பார். அவரை காதலிக்கும் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதற்காக பெண் வேடமிட்டு நர்ஸாக அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு கீர்த்தி சுரேஷிற்கு நெருங்கிய தோழியாக பெண் வேடமிட்ட சிவகார்த்திகேயன் மாறுகிறார். அதனைத் தொடர்ந்து அவர் தன் காதலை எப்படி வெளிப்படுத்தினார். அதனை கீர்த்தி சுரேஷ் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தபோது திரையரங்குகளில் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
ரெமோ படம் குறித்து முன்னதாக சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
After a very big team effort #Remo releasing today💘..Pls do watch in theatres,hope u all wil lik it😊👍 pic.twitter.com/XIjmlnv8Jf
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 6, 2016
Also Read… வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது