Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!

Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று கார் விபத்தில் சிக்கினார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா தனது உடல் நலம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
நடிகர் விஜய் தேவரகொண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2025 11:18 AM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda). இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தெலுங்கு நடிகராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்றே சொல்லலாம். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிச்சய செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா கார் விபத்தில் சிக்கியதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரது உடல்நலம் குறித்து ரசிகர்கள் வேதனைத் தெரிவித்தும் வந்தனர்.

உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது நன்றிகள்:

எல்லாம் சரியா இருக்கு. கார்ல ஒரு தடவ மோதிருச்சு, ஆனா நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். போய் ஒரு ஸ்ட்ரென்த் வொர்க்அவுட்டும் பண்ணிட்டு இப்போதான் வீட்டுக்கு வந்தேன். எனக்கு தலை வலிக்குது, ஆனா பிரியாணி, தூக்கம் எதுவும் சரியாயிடாது. உங்க எல்லாருக்கும் ரொம்ப பெரிய அணைப்புகள், என் அன்பு. இந்த செய்தி உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்க விடாதீங்க என்று அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

Also Read… பைசன் தான் என் முதல் படம்னு நான் நினைக்கிறேன் – துருவ் விக்ரம் சொன்ன விசயம்!

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!