Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது கற்றது தமிழ் படம்

18 Years Of Kattradhu Thamizh Movie: இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் கற்றது தமிழ். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது கற்றது தமிழ் படம்
கற்றது தமிழ் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2025 16:34 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 05-ம் தேதி அக்டோபர் மாதம் 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கற்றது தமிழ். இந்தப் படத்தை இயக்குநர் ராம் இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை அஞ்சலி நாயகியாக நடித்து இருந்தார். அதன்படி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அஞ்சலி நாயகியாக அறிமுகம் ஆன படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியின் நடிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அஞ்சலி உடன் இணைந்து நடிகர்கள் கருணாஸ், அழகம் பெருமாள், ஸ்ரீ ராம், வெண்பா, மணி கே. சூர்யா, காக்கா கோபால்,
உமாபதி, கணேஷ் பாபு, குரு, காதல் கண்ணன், அருள்மணி, புவனா, செந்தி குமாரி, சரவணன், அனுராதா, நந்து, பிர்லா போஸ், கர்ண ராதா, எஸ்.எஸ்.ஆனந்த் என பலரும் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also Read… ரொமாண்டிக் காமெடி வெப் சீரிஸ் பாக்கனுமா நீங்க? அமேசான்ல இருக்க இந்த When I Fly Towards You மிஸ் செய்யாதீர்கள்

கற்றது தமிழ் படத்தின் கதை என்ன?

உலகமயமாக்கத்தின் காரணமாக நாட்டில் தொழில் முறை எப்படி மாறியது என்றும் உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் எதிர்பாராமல் கிடைக்கும் அன்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்பது குறித்து வெளிப்படையாக இந்தப் படத்தில் இயக்குநர் ராம் வெளிப்படையாக பேசி இருந்தார்.

படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் நா முத்துகுமார் வரிகள் மிகவும் உயர்த்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… அந்தப் படத்தை பார்த்துவிட்டு தியேட்டர்ல விட்ட காரை மறந்து வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன் – இயக்குநர் விக்ரமனை வெகுவாக பாதித்தப் படம் எது தெரியுமா?