Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அந்தப் படத்தை பார்த்துவிட்டு தியேட்டர்ல விட்ட காரை மறந்து வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன் – இயக்குநர் விக்ரமனை வெகுவாக பாதித்தப் படம் எது தெரியுமா?

Director Vikraman: தமிழ் சினிமாவில் ஃபேமில் செண்டிமெண்ட் மற்றும் காதலை மையமாக வைத்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன். இவர் சமீபத்தில் தன்னை மிகவும் பாதித்த படம் ஒன்று குறித்து வீடியோ வெளியிட்டது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்தப் படத்தை பார்த்துவிட்டு தியேட்டர்ல விட்ட காரை மறந்து வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன் – இயக்குநர் விக்ரமனை வெகுவாக பாதித்தப் படம் எது தெரியுமா?
இயக்குநர் விக்ரமன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2025 06:30 AM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் விக்ரமன் (Director Vikraman). இந்தப் படத்தில் நடிகர் முரளி நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், மாதவன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் 30 ஆண்டுகளைக் கடந்தும் தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, சென்னை காதல், மரியாதை, நினைத்தது யாரோ என பலப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை மிகவும் பாதித்தப் படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சேது படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா மீது மிகபெரிய மரியாதை வந்தது:

அதன்படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வெளியான படம் சேது. இந்தப் படம் குறித்து இயக்குநர் விக்ரமன் பேசியதாவது, இந்த சேது படம் திரையரங்குகளில் வெளியான போது வானத்தை போல ஷூட்டிங்கில் இருந்தேன். அந்தப் படம் நல்லா இருக்குனு விமர்சனத்தை பார்த்துட்டு தியேட்டருக்கு போய் சேது படத்தைப் பார்த்தேன்.

முதல் பாதி மிகவும் சாதாரணமாக சென்றுகொண்டு இருந்தது. அப்படியே இரண்டாவது பாகம் வந்ததும் என் மனசு எல்லாம் கணக்க ஆரம்பிச்சுடுச்சு. பொதுவா ஒரு படம் முடிஞ்சு வெளிய வரும் போது எல்லாரும் பேசிட்டே படம் எப்படி இருக்கு அது எப்படி இருக்குனு பேசிட்டே வருவாங்க. ஆன அந்தப் படத்தைப் பார்த்துட்டு யாருமே பேசவே இல்லை ரொம்ப அமைதியா தியேட்டர்ல இருந்து எல்லாம் போனாங்க.

நானும் நடந்தே வீட்டுக்கு வந்துட்டேன். வீட்டுக்கு வந்த அப்பறன் என் மனைவியும் மகனும் வெளியே செல்வதற்காக கார் எங்கே என்று கேட்கும் போதுதான் நான் காரை கூட மறந்துட்டு அந்தப் படத்தின் தாக்கத்துலேயே வீட்டுக்கு வந்தது உணர்ந்தேன் என்று இயக்குநர் விக்ரமன் பாலாவின் சேது படத்தை மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.

Also Read… முந்தானை முடிச்சு படத்தில் விளக்கு வச்ச நேரத்திலே பாடல் உருவான விதம் – பாக்யராஜ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

இயக்குநர் விக்ரமன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by B Vikraman (@vikramandirector)

Also Read… ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹிருதயப்பூர்வம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!