பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்
Actress Madonna Sebastian: மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரல நடிகருடன் அவர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் மடோனா செபாஸ்டியன் (Madonna Sebastian). இவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகயாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் இணைந்து நடித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் தற்போது இந்தப் படத்தின் காட்சிகளை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை மடோனா செபாஸ்டியன் படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான கவன், பவர் பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா, லியோ மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொடர் வெற்றியால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.




பிரபாஸ் படத்தில் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்:
அதன்படி தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகர் பிரபாஸில் நடிப்பில் உருவாக உள்ள ஸ்பிரிட் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மீசையமுறுக்கு 2வில் நடிக்க மறுத்த இசையமைப்பாளர்.. யார் தெரியுமா?
நடிகை மடோனா செபாஸ்டியனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? வைரலாகும் தகவல்