Benz : ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த லியோ நடிகை… மீண்டும் ‘LCU-வில்’ நுழைந்த மடோனா செபாஸ்டியன்!
Benz Movie Updates : தமிழ், மலையாளம் என போன்ற மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் மடோனா செபாஸ்டியன். இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழில் ஜாலி ஓ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜின் LCU படமான பென்ஸ் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கத்தில் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகும் படம் பென்ஸ் (Benz). இந்த படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) மற்றும் நிவின் பாலி (Nivin Pauly) இணைந்து முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆரம்பத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மட்டும் கதாநாயகனாக நடித்துவருவதாக கூறப்படட நிலையில், அதை தொடர்ந்து மலையாள நடிகர் நிவின் பாலியும் இப்படத்தில் இணையான முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இந்த பென்ஸ் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் (Lokesh Kanagaraj) தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தின் கதையும் லோகேஷ் கனகராஜ் எழுத, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இந்த பென்ஸ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளாராம். அவர் வேறு யாருமில்லை தமிழ், மற்றும் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன்தான் (Madonna Sebastian). இவர் ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான லியோ (Leo) படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.




இந்த படமும் லோகேஷின் LCU (Lokesh Cinematic Universe) தொகுப்பிலுள்ள நிலையில், மேலும் இந்த பென்ஸ் படத்தின் கதைக்களமும் லியோ படத்திற்கு முந்தைய கதைக்களத்தை கொண்டப்படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்துப் படக்குழு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவல் தினத்தந்தி செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பென்ஸ் படக்குழு வெளியிட்ட பதிவு :
10M+ of y’all cumulatively said “Love you Walter” 💥
Our Baddie AKA @nivinofficial in #Benz universe 🔥
🔗 https://t.co/gwvlmEZY89@offl_Lawrence @Dir_Lokesh @PassionStudios_ @TheRoute @GSquadOffl @Sudhans2017 @Jagadishbliss @bakkiyaraj_k @SaiAbhyankkar pic.twitter.com/fMaBtRdux4
— GSquad (@GSquadOffl) June 6, 2025
பென்ஸ் படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் பேச்சு :
பென்ஸ் படத்தைச் சுல்தான் மற்றும் ரெமோ போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்தான் இயக்கி வருகிறார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த நிலையில், லோகேஷ் கனகராஜும் , தானும் மிக நல்ல நண்பர்கள். ஆரம்பத்தில் லோகேஷ் LCU படத் தொகுப்பில் இணையும் படங்களை மற்ற இயக்குநர்களும் இயக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்.
அதைத் தொடர்ந்து LCU இணையும் இந்த பென்ஸ் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். இந்த பென்ஸ் படமானது LCU படத் தொகுப்பில் இருந்துவரும் நிலையில், அப்படித்தான் கதையை லோகேஷ் கனகராஜ்தான் எழுதியிருக்கிறார், மேலும் நானும் அந்த கதையில் பணியாற்றியிருக்கிறேன் என்றுகூறியிருந்தார் பாக்கியராஜ் கண்ணன்.
பென்ஸ் திரைப்படம் :
இந்த பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் ஆர். மாதவனும் இப்படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாணும் இப்படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதைப் பற்றிய எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் மிகப் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகிவருகிறது. இடத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.