Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Benz : ‘பென்ஸ்’ படத்தில் நிவின் பாலியைத் தொடர்ந்து இணைந்த தமிழ் பிரபலம்.. யார் தெரியுமா?

Benz Movie Update : இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி இணைந்து நடித்துவரும் படம் பென்ஸ். இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதி மற்றும் இப்படத்தைத் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் மேலும் தமிழ் நடிகர் ஒருவர் இணைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Benz : ‘பென்ஸ்’ படத்தில் நிவின் பாலியைத் தொடர்ந்து இணைந்த தமிழ் பிரபலம்.. யார் தெரியுமா?
பென்ஸ் திரைப்படம் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 09 Jun 2025 21:07 PM

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் ரஜினியின் கூலி  (Coolie) படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குவதைத் தொடர்ந்து படத்தை தயாரித்துவரும் இவரின் நிறுவனத்தின் கீழ் உருவாகிவரும் படம்தான் பென்ஸ் (Benz). இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்  (Bakkiyaraj kannan) இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே சுல்தான் மற்றும் ரெமோ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அந்த படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கிவரும் படம் பென்ஸ். இப்படத்தில் முன்னணி நடிகர்களாக ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) மற்றும் மலையாள நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, மே இறுதியில் நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் நிவின் பாலி இணைந்ததாக 2025, ஜூன் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண்தான். இவர் இணைந்துள்ளார் என்பதைப் பற்றி இன்னும் படக்குழு அறிவிப்பை வெளியிடவில்லை. இது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் படக்குழு வெளியிட்ட பதிவு :

ராகவா லாரன்ஸ் – நிவின் பாலியின் பென்ஸ்  :

இந்த பென்ஸ் படத்தின் கதைக்களத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், பென்ஸ் பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். “பென்ஸ் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருந்தாலும், அந்த கதையில் நானும் வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த பென்ஸ் படமும் லோகேஷ் கனகராஜின், “லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பட தொகுப்பில் இணையவுள்ளது. கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் வரிசையில் இந்த பென்ஸ் படமும் இணைகிறது. இந்த படம் நிச்சயமாக மாபியா கதைக்களத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பென்ஸ் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து பென்ஸ் டீம் மற்றும் வால்டர் தீம் என இரு தீம் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படத்திற்கான பாடல்கள் இசையமைப்பில் சாய் அபயங்கர் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ், நிவின் பாலி இணைந்து நடித்துவரும் இப்படத்தில் மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளாராம். அதில் பிரியங்கா மோகன், வாத்தி பட நடிகை சம்யுக்தா மற்றும் மடோனா செபஸ்டியன் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...