Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arya : அதிரடி நாயகனாக ஆர்யா.. மலையாள இயக்குநருடன் இணைந்த புதிய படத்தின் டைட்டில் டீசர்!

Arya And Nikhila Vimal New Movie : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எனக் கலக்கி வருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arya : அதிரடி நாயகனாக ஆர்யா.. மலையாள இயக்குநருடன் இணைந்த புதிய படத்தின் டைட்டில் டீசர்!
ஆர்யா மற்றும் நிகிலா விமல் புதிய படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 09 Jun 2025 18:21 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆர்யா (Arya). இவரின் நடிப்பில் இறுதியாகக் கடந்த 2023ம் ஆண்டு தமிழில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்  (Kathar Basha Endra Muthuramalingam) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தைப் பிரபல இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய ரோலிலும், தமிழில் சில படங்களில் கேமியோ தோற்றத்திலும் நடித்திருந்தார். மேலும் தமிழில் இவரின் அதிரடி நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் (Mr. X) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் (Jiyen Krishnakumar) இயக்கத்தில் தமிழில் நடித்துவரும் திரைப்படம் ஆரம்பத்தில் ஆர்யா36 என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்குப் படக்குழு “அனந்தன் காடு” (Ananthan kaadu) என்று டைட்டிலை வைத்திருக்கிறது. தற்போது இப்படத்தின் அதிரடி டீசர் மற்றும் முதல் பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்யா வெளியிட்ட அனந்தன் காடு படத்தின் டீசர் மற்றும் முதல் பார்வை பதிவு :

ஆர்யாவின் அனந்தன் காடு :

தமிழில் ஆர்.ஜே. பாலாஜியின் ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார்தான், இந்த அனந்தன் காடு படத்தையும் இயக்கியிருக்கிறார். இவர் மலையாளத்திலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் ஆர்.ஜே. பாலாஜியின் ரன் பேபி ரன் படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் அனந்தன் காடு. இப்படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சுனில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதைக்களமானது அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் படமாக அமைந்துள்ளது. நிச்சயமாக ஆர்யாவுக்கு இப்படம் வெற்றியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யாவின் புதிய படம் :

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு இந்தப் படங்களும் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகிவந்தார். அதில் ஒன்றுதான் மிஸ்டர் எக்ஸ். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பாடல்கள் என வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதில் நடிகர் ஆர்யா ராணுவ உளவாளியாக நடித்திருக்கிறார். இப்படமானது முழுமையாகத் தயாராகிய நிலையில், ரிலீஸ் தேதி வெளியாகவில்லை. இப்படத்தை தொடர்ந்து அனந்தன் காடு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இதைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா 2 படத்தில் இணையவுள்ளார்.

ரியோ ராஜின் 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு!
ரியோ ராஜின் 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு!...
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: காண முடியாதவர்களுக்கு 50,000 இழப்பீடு
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: காண முடியாதவர்களுக்கு 50,000 இழப்பீடு...
அட்லியின் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!
அட்லியின் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!...
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா? பிசிசிஐ போடும் திட்டம்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா? பிசிசிஐ போடும் திட்டம்!...
குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?
குபேரா படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் என்ன?...
இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!
இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!...
தனுஷின் குபேரா படத்தின் '3வது சிங்கிள்' எப்போது ரிலீஸ் தெரியுமா?
தனுஷின் குபேரா படத்தின் '3வது சிங்கிள்' எப்போது ரிலீஸ் தெரியுமா?...
WhatsApp ஸ்டோரேஜ் பிரச்னைக்கு தீர்வு: புதிய டவுன்லோடு குவாலிட்டி!
WhatsApp ஸ்டோரேஜ் பிரச்னைக்கு தீர்வு: புதிய டவுன்லோடு குவாலிட்டி!...
Repo Rate குறைந்தாலும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
Repo Rate குறைந்தாலும் FD-க்கு 9.10 வரை வட்டி வழங்கும் வங்கிகள்!...
தொண்டர்களுக்காக இதை செய்வேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
தொண்டர்களுக்காக இதை செய்வேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!...
ஆர்யாவின் 36வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!
ஆர்யாவின் 36வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!...